நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது.
தோல்விக்கான காரணம் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரகானே சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கொல்கத்தா அணி தோல்வி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 116 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கொல்கத்தா அணியை பொருத்தவரை அதன் மிடில் வரிசை பேட்ஸ்மேன் அன்கிரிஷ் ரகுவன்சி 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். மும்பை அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 13 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 62 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரகானே சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதை சரியாக யாரும் கவனிக்கல
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது எங்கள் அணியின் பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக உண்டான தோல்வி ஆகும். நான் டாசில் குறிப்பிட்டது போல இது பேட்டிங் செய்ய ஒரு அற்புதமான விக்கெட்டாக இருந்தது. இந்த விக்கெட்டில் 180 முதல் 190 ரன்கள் வரை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த ஆடுகளம் நல்ல ஒரு பவுன்ஸ் கொண்ட ஆடுகளமாகும். நீங்கள் ஒரே நேரத்தில் பவுன்ஸ் மற்றும் வேகத்தை பயன்படுத்தி விளையாட வேண்டும். இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் மிக வேகமாக கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
இதையும் படிங்க:இளம் பவுலருக்கு வாய்ப்பு கொடுக்க முக்கிய காரணமே இதுதான்.. அந்த 2 விஷயம் அபாரமா செஞ்சாரு – கேப்டன் பாண்டியா புகழாரம்
இதில் அணியின் பந்துவீச்சை எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த அளவு எதிர் அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சித்தனர். ஆனால் ஸ்கோர் போர்டு பலகையில் எதிர்பார்த்த ரன்கள் இல்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். பவர்பிளேவில் மொத்தமாக நான்கு விக்கெட்டுகள் இழந்தோம். எனவே அந்த மொத்தத்தை சேர்த்து பலகையில் ஒருங்கிணைத்தது கடினமாக இருந்தது. எங்கள் அணியில் கடைசி வரை நிலைத்த நின்று விளையாட ஒரு பேட்ஸ்மேன் தேவை” என்று அவர் பேசி இருக்கிறார்.






