சிஎஸ்கே மேட்ச் முன்ன எனக்கு உடம்பு சரியில்ல.. ஆனா டிராவிட் சொன்ன அதுக்காக வந்தேன் – நிதிஷ் ராணா பேட்டி

0
7
Nitish

நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்தது குறித்தும், தன்னிடம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்ன கூறினார் என்பது குறித்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் நிதிஷ் ராணா பேசியிருக்கிறார்.

இவர் கடந்த இரண்டு போட்டிகளாக பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் விளையாடி வந்தார். ஏற்கனவே கடந்த வருடத்தில் நான்காவது இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் மூன்றாவது இடத்திற்கு அனுப்பப்பட்டார். இந்த மாற்றத்தின் காரணமாக இரண்டு வீரர்களுமே ஜொலிக்க தவறினார்கள். ஆனால் நேற்று ஒரு மாற்றம் செய்ததன் மூலம் மிகச்சிறந்த ஆட்டம் இவர்களிடம் வெளிப்பட்டது.

- Advertisement -

தோற்றதை வைத்து வென்றோம்

இது குறித்து நிதிஷ் ராணா கூறும் பொழுது ” இந்த இரண்டு புள்ளிகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த இரண்டு புள்ளிகளை நாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் எடுத்திருக்க வேண்டும். ஆனாலும் நாங்கள் தோற்ற இரண்டு ஆட்டங்களில் இருந்து எங்களுக்கு நல்ல பாடம் கிடைத்தது. நாங்கள் அதை எடுத்துக் கொண்டுதான் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்றோம்”

” நான் சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக உடல் நலம் இல்லாமல் இருந்தேன். அப்போது என்னை அழைத்த ராகுல் டிராவிட் சார் என்னை மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்றும், நான் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். என்னை யாராவது நம்பும்பொழுது அது எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தூண்டுகிறது”

- Advertisement -

அவர் சொன்னதும் முடிவு செய்தேன்

“எனவே என்னிடம் ராகுல் டிராவிட் சார் இப்படி சொன்னதுமே, நான் விளையாடக்கூடிய ஷாட்கள் இந்த ஆடுகளத்தில் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று முடிவு செய்தேன். பின்பு நான் நினைத்தபடி அதையே வந்து ஆட்டத்தில் செய்தேன். நமக்கான நேரம் வருகின்ற பொழுது நம்மிடம் இருந்து ரன்களும் வரும்”

இதையும் படிங்க : 151.6 கிமீ.. இதுவரை ஐபிஎல் 2025ல் வீசப்பட்ட 5 வேகப்பந்துகள்.. முழு பட்டியல்

“இந்த இரண்டு போட்டிகளிலும் நான் இதையே செய்ய முயற்சி செய்தேன். ஆனால் நாம் முந்தைய ஆட்டங்களில் என்ன செய்தோம் என்பதை பகுப்பாய்வு செய்து ஒரு முனையில் இருந்து அதற்கு ஏற்றபடி செய்ய ஆரம்பித்தால் நல்ல ரிசல்ட் வருகிறது. எனக்கு இப்படித்தான் இந்த போட்டியில் ரன்கள் வந்தது. மேலும் உள்நாட்டு போட்டியிலும் எனக்கு இதுதான் வெற்றி தரக்கூடியதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -