ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிலா ஜெயவர்த்தனை பும்ரா குறித்த முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார்.
காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ரா
பதினெட்டாவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் முக்கியமான ஆட்டத்தில் இன்று குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது. தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த மும்பை அணி தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முதல் போட்டியை தவறவிட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
மும்பை அணியின் முக்கிய தூணாக பார்க்கப்படும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, இன்னும் மும்பை அணியில் இணையவில்லை. கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தால் விலகிய அவர், சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் காயத்திலிருந்து நன்றாக குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும் என்சிஏ இடமிருந்து அவர் எப்போது விளையாடுவார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
கோச் கொடுத்த அப்டேட்
இந்த சூழ்நிலையில் பும்ரா ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைவார் என்ற தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது வலுவாக இருந்தாலும் பந்துவீச்சில் பும்ரா இல்லாதது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனே பும்ரா விரைவில் அணியோடு இணைவார் என்ற தகவலை கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:யாராவது எனக்கு சொல்லுங்கப்பா.. தோனிய அதுக்கா சிஎஸ்கேவுல வச்சிருக்கிங்க? – மனோஜ் திவாரி விமர்சனம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா தனது திட்டத்தின் அடிப்படையில் சரியாக அனைத்தையும் செய்து வருகிறார். இதுவரை அவர் குறித்து அனைத்தும் சரியாக நடந்து வருகிறது. ஆனால் அவர் குறித்து என்சிஏ எந்தக் காலக்கெடுவையும் வழங்கவில்லை. எனவே நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார். பயிற்சியாளர் கூறுவதை பார்த்தால் பும்ரா இன்னும் சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரைவாக இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.






