இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதி கொண்ட போட்டியில் ஆர்சிபி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் செய்த ஒரு தவறு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று இருந்தது. அந்த போட்டி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு எலிமினேட்டர் போட்டி போல அமைந்து இருந்தது. இதன் காரணமாக அந்த தோல்வி சிஎஸ்கே ரசிகர்களை பெரிய அளவில் பாதித்திருந்தது. எனவே தங்கள் சொந்த மைதானத்தில் அதற்காக பதிலடி கொடுக்க சி எஸ் கே ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
தோனியின் தலையீடு கிடையாது
ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே கேப்டன் ருதுராஜ் எல்லா முடிவுகளையும் எடுப்பதாகவும், தான் களத்தில் ஃபில்டர்கள் சரியான கோணத்தில் இருப்பதை மட்டுமே பார்ப்பதாகவும், முக்கிய முடிவுகளில் தான் தலையிடுவது இல்லை எனவும் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி மிகத் தெளிவாக கூறியிருந்தார். இதன் மூலம் ருதுராஜ் சுதந்திரமாக முடிவுகள் எடுக்கிறார் என்பது தெளிவானது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கு காயத்தில் இருந்த பதிரனா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனவும், எனவே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்க வேண்டாம் எனவும் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பதிரனா விளையாடியது அந்த அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இந்த முடிவை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருமே சேர்ந்து எடுத்திருக்க முடியும்.
ருதுராஜ் பிளமிங் செய்த தவறு
இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லீஸ் இடத்தில் பதிரனா இடம் பெற்றார். நாதன் எல்லீஸ் பவர் பிளேவில் குறைந்தது இரண்டு ஓவர்கள் பந்து வீசும் நிலையில் இருக்கக்கூடியவர். ஆனால் பதிரனா மிடில் மற்றும் டெத் ஓவர்களில் மட்டுமே பந்து வீசக் கூடியவர். இந்த நிலையில் இன்று கலில் அகமது மட்டுமே பவர் பிளே வேகப் பந்து வீச்சாளராக சிஎஸ்கே அணியில் இருந்தார். சாம் கரன் சப்போர்ட் பவுலர் ஆக மட்டுமே இருக்க முடிந்தவர்.
இதையும் படிங்க : நாங்க இதை பண்ணா சிஎஸ்கே மாட்டுவாங்கனு தெரியும்.. அதான் பிளானை கவனமா செஞ்சோம் – ஆர்சிபி கேப்டன் பேட்டி
இந்த நிலையில் இன்று ஆடுகளம் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு நல்ல சாதகத்தை கொடுத்தது. நல்ல பவுன்ஸ் இருந்தது. இதை கலில் அகமது சிறப்பாக பயன்படுத்தினார். ஆனால் அவருடன் இணைந்து இதை பயன்படுத்திக் கொள்வதற்கு இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லீஸ் அணியில் இல்லை. இதன் காரணமாக உள்ளே வந்த அஸ்வின் ரெண்ட் கொடுத்தார். துருப்புச்சீட்டான நூர் அகமதுவின் ஒரு ஓவரும் பவர் பிளேவில் வீச வேண்டியதாக அமைந்தது. பதிரனாவை கொண்டு வந்த முடிவதால் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இரண்டாவது காரணமாக ரஜத் பட்டிதாருக்கு தீபக் ஹூடா கேட்ச் விட்டது அமைந்தது.






