ஹர்திக் பாண்டியா இந்த 2 ஸ்பெஷல் விஷயம் கையில வச்சிருக்கார்.. இந்திய கேப்டன்ஸ் அவர் பின்னாடி நிப்பாங்க – இர்பான் பதான்

0
78

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் அடுத்த போட்டிக்கு முன்னதாக ஹர்த்திக் பாண்டியா மும்பை அணியுடன் இணைந்து இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஹர்திக் பாண்டியா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

குஜராத் மும்பை மோதல்

கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா செய்த சிறு தவறின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது ஆட்டத்தை பாண்டியா தவறவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக மும்பை அணியை வழி நடத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் தோல்வியடைந்து இருந்த நிலையில் இரண்டாவது போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாட உள்ளது.

இந்த போட்டியின் மூலமாக ஹார்திக் பாண்டியா தனது கேப்டன் பதவியை திரும்பவும் ஏற்கிறார். கடந்த சீசனில் மும்பை அணியை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா, பெரிய விமர்சனங்களையும், எதிர்மறையான கருத்துக்களையும் எதிர்கொண்டார். ஆனால் இந்த சீசன் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு மற்றும் இந்திய அணித் தலைவர்கள் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாண்டியா மீது அழுத்தம் இல்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மும்பை அணிக்காக இது இரண்டாவது சீசன் என்பதால் ஹர்திக் பாண்டியா மீது அவ்வளவு அழுத்தம் இருக்காது. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா காட்டிய நம்பிக்கை மிகவும் அபாரமாக இருந்தது. டி20 உலக கோப்பையை வென்று, அதற்குப் பின்னால் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மீண்டும் அந்த நம்பிக்கையை ஐபிஎல் தொடருக்கு ஹர்திக் பாண்டியா கொண்டு வருவார்.

இதையும் படிங்க:ஆர்சிபி போட்டியில் விலகல்.. சிஎஸ்கே நட்சத்திர வீரர் காயம்.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்.. ஐபிஎல் 2025

அனைத்து தலைவர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா பின்னால் அணி திரள்வார்கள். இது ஒரு மிகப்பெரிய அம்சமானதாக இருக்கும்” என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார். வருகிற சனிக்கிழமை குஜராத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஹர்த்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு மாறியிருக்கும் நிலையில் இந்தப் போட்டி இரு ரசிகர்கள் இடையேயும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -