கோலி, ரோகித் ஊதியத்தை குறைக்க பிசிசிஐ முடிவு.. ஸ்ரேயாஸ், அபிசேக் சர்மாவுக்கு புதிய ஒப்பந்தம்?

0
13

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடப்படும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இவர்களுக்கு ஆண்டு சம்பளம் என்பது உறுதி. எனினும் இந்த ஒப்பந்தத்தை படி வீரர்கள் பல கண்டிஷனுக்கு கட்டுப்பட வேண்டும்.

இந்த ஊதிய ஒப்பந்தத்தில் இடம்பெறாத வீரர்கள் கூட இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது தனி விஷயம். இந்த சூழலில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இசான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த சூழலில் ஸ்ரேயாஸ் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார்.

- Advertisement -

ஊதிய குறைப்பு காரணம் என்ன?

இதனால் அவருக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரின் ஊதியத்தை குறைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வரும் மார்ச் 29ஆம் தேதி கவுகாத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ முக்கிய நிர்வாகிகளுடன் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் பேச இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட போகும் வீரர்களை அடையாளம் கண்டு 30 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவிக்க அஜித் அகார்கர் தயாராக உள்ளார்.

- Advertisement -

யாருக்கு அதிகரிக்கப்பட உள்ளது?

மேலும் பிசிசிஐ ஊதியம் ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய முடிவு எடுத்தப்பட உள்ளது.விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் தற்போது டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடுகிறார்கள். இதில் ஒருநாள் போட்டியில் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றாலும், டெஸ்ட் தொடரில் இந்தியா தொடர் தோல்வியை தழுவி வருகிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. ஆர்சிபிக்கு எதிரான போட்டி, சிஎஸ்கே செய்ய வேண்டிய மாற்றம் என்ன? அதிக ரன் குவித்தவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இதன் காரணமாக இந்த மூன்று வீரர்களின் ஊதியத்தையும் குறைக்கப்பட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி a+ஊதியத்தில் இருக்கும் இந்த மூன்று வீரர்களும் எ குரூப்புக்கு மாற இருக்கிறார்கள். இந்த சூழலில் சகில் தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஏ ப்ளஸ் ஊதியம் வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோன்று ஜெயஸ்வால், அக்சர் பட்டேல் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -