286-6.. ஐந்தில் நான்கு.. இஷான் கிஷான் ருத்ர தாண்டவ சதம்.. ஹைதராபாத் மெகா ரெக்கார்ட்.. பரிதாப ராஜஸ்தான்

0
286
Ishan

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

இரு அணிக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ருத்ர தாண்டவம் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா 11 பந்தில் 24 ரன்கள், டிராவிஸ் ஹெட் 31 பந்தில் ஒன்பது பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி 15 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்து ஒரு முனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 45 பந்தில் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 47 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஹைதராபாத் புதிய சாதனை

இந்த போட்டியில் 286 ரன்கள் குவித்ததின் மூலமாக, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்னை ஹைதராபாத் அணி பதிவு செய்திருக்கிறது. மேலும் முதலிடத்திலும் ஹைதராபாத் அணியை கடந்த ஆண்டு 287 ரன்கள் குவித்து இருக்கிறது. மேலும் முதல் 5 இடங்களில் 4 இடங்களில் ஐதராபாத் அணியின் ஆதிக்கமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிஎஸ்கேவில் மட்டுமே 4 பேர்.. ஐபிஎல் 2025ல் களமிறங்கும் 12 தமிழக கிரிக்கெட் வீரர்கள்.. முழு விபரம்

ஐபிஎல் வரலாற்றில் அணிகளின் அதிகபட்ச ஸ்கோர் :

287 – ஹைதராபாத் vs ஆர்சிபி
286 – ஹைதராபாத் vs ராஜஸ்தான்
ராயல்ஸ்
277 – ஹைதராபாத் vs மும்பை
272 – கொல்கத்தா vs டெல்லி
266 – ஹைதராபாத் vs டெல்லி

- Advertisement -