இவர் இன்னும் மாறல.. பும்ராவால் என்னை எதுவும் செய்ய முடியாது.. அவரின் விஷயம் எனக்கு தெரியும் – பென் டக்கட்

0
134

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததும் வருகிற ஜூன் மாதம் முதல் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் வீரர் பென் பக்கட் ஜஸ்பிரித் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீப காலமாக பெரிய இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையில் அரை இறுதிப்போட்டியோடு வெளியேறிய இங்கிலாந்து அணி அதற்கு பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியிடம் அரைஇறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. மேலும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி அதற்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் லீக் சுற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் இந்திய அணியின் நம்பர் ஒன் பவுலர் பும்ரா குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இவர் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார் ஆனால் அரைஇறுதிக்கக்கூட இங்கிலாந்து அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனக்கு நன்றாக தெரியும்

இந்த சூழ்நிலையில் பென் டக்கட் கூறும்போது “நான் பும்ராவை ஐந்து டெஸ்ட் தொடர்களில் எதிர்கொண்டு இருக்கிறேன். அவர் எனக்கு என்ன செய்யப் போகிறார் என்று நன்றாகவே தெரியும். இதில் குறிப்பிடத்தக்க விதமாக நல்ல விஷயம் என்னவென்றால் அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். இதனால் என்னை ஆச்சரியப்படுத்தும் புதிய விஷயம் எதுவும் இருக்கப்போவதில்லை” என்று அவர் பேசியிருக்கிறார். அவரது கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:பும்ரா திரும்ப வந்தாலுமே பிரச்சனை மும்பை அணிக்குதான்.. அதற்கு இந்த விஷயமே முக்கிய காரணம் – ஆஸி முன்னாள் கேப்டன்

உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழும் பும்ரா, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது ஐந்தாவது போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். இருப்பினும் அந்த தொடரில் அவர்தான் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் தொடரிலும் ஏப்ரல் முதல் வாரத்திற்கு பிறகு அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிசிசிஐ அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு களம் இறக்கம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -