விராட் கோலியுடன் உலக கோப்பையை ஜெயிச்சு.. ஐபிஎல்-ல் அம்பயர் ஆக வரும் வீரர் – சுவாரசிய தகவல்

0
498
Virat

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி உடன் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை இறுதி போட்டியில் கலக்கி, தற்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் அம்பயராக ஒரு இந்திய உள்நாட்டு வீரர் வர இருக்கிறார் என்கின்ற சுவாரசிய செய்தி வெளியாகியிருக்கிறது.

அதே சமயத்தில் 2008 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற விராட் கோலி ஐபிஎல்லில் தனது 18-வது சீசனை தொடர்ந்து விளையாட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவருடைய கிரிக்கெட் வாழ்வும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை கொண்டதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

2008 அண்டர் 19 உலகக்கோப்பை பைனல்

இதில் இந்திய அணியின் தரப்பில் மிக அதிகபட்ச ரன்னாக தன்மய் ஸ்ரீவஸ்தவா 43 ரன்கள் எடுத்தார். இவர் எடுத்த ரன்கள் தான் இந்திய அணியை போராடும் அளவுக்கு எடுத்துச் சென்றது. மேலும் அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விராட் கோலி தலைமையில் அண்டர் 19 உலகக் கோப்பையையும் வென்றது.

இதைத்தொடர்ந்து விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கிருந்து அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டையும் உறுதியாக பிடித்துக் கொண்ட விராட் கோலி இன்று கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரராக மாறி நிற்கிறார். உலகெங்கும் அவருக்கென தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அம்பயர்

இந்த நிலையில் பேட்டிங்கில் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்த தன்மய் ஸ்ரீவஸ்தவா நடப்பு ஐபிஎல் தொடரில் அம்பயராக செயல்பட இருக்கிறார் என்பது சுவாரசியமானதாக அமைகிறது. அவர் 90 உள்நாட்டு போட்டிகளில் விளையாடி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் முதல் முறை புதிய ரோலில் கேஎல் ராகுல்.. தமிழக வீரர் போடும் ஸ்கெட்ச்.. வெளியான புதிய தகவல்

அதே சமயத்தில் அவருக்கு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டில் மொத்தம் ஏழு போட்டிகளில் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். இதற்குப் பிறகு உள்நாட்டு போட்டிகளில் விளையாடி பிறகு ஓய்வு பெற்று, உள்நாட்டுப் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி தற்பொழுது ஐபிஎல்லுக்கு அம்பயராக செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -