50 ரன்னுக்கு 6 சிக்ஸர் அடிப்பேன்.. எங்க டீம் பிளான் ஒட்டு மொத்தமாக இதுதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
241
Hardik

இந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனில் தன்னுடைய திட்டமும் தங்கள் அணியின் திட்டமும் எப்படியானது என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக அந்த அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கிளம்பினார்கள். இதனால் அவருக்கு மைதானத்திலேயே சொந்த ரசிகர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா எதிர்ப்பை மாற்றிய ரோகித் சர்மா

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. பிறகு இதற்கான பாராட்டு விழா மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. எந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் எதிர்க்கப்பட்டாரோ அதே மைதானத்தில் ரசிகர்களால் வரவேற்கவும் பட்டார். தற்போது சூழ்நிலை மாறி அவருக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய திட்டம் பற்றி பேசி இருக்கும் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “பாருங்கள் எனக்கு என்று எந்த திட்டமும் கிடையாது. நான் எப்பொழுதும் ஸ்கோர் போர்டை பார்த்து அணிக்காக சூழ்நிலையை முன் வைத்து விளையாடுகிறேன். நான் ரன்களை துரத்திக் கொண்டிருக்கும் பொழுது தேவையான சிக்ஸர் மற்றும் சிங்கிள் ரன்களை விரல்விட்டு எண்ணிக் கொண்டிருப்பேன்”

- Advertisement -

அணியின் திட்டம் இதுதான்

“அணிக்கு 24 பந்தில் 50 ரன்கள் தேவை என்கின்ற நிலை இருந்தால், நான் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் மூலமாக 36 ரன்கள் கொண்டு வருவதற்கு திட்டமிடுவேன். மேலும் ஒரு பத்து பந்துகளில் பஃப்பர் ஆகும். அதில் கிடைக்கும் சிங்கிள்கள் மூலமாக தேவையான 50 ரன்கள் எடுப்பேன். இதில் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து நான் வெற்றியை பெறுவேன்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. அம்பதி ராயுடு மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் XI.. வித்தியாசமான மாஸ் செலக்சன்

” தற்போது டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் செல்லும் விளையாட்டாக இருக்கிறது. இதன் காரணமாக அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவையாக இருக்கிறார்கள். நாங்கள் இதை வைத்து எங்கள் அணிக்கு தேவையான அனுபவ பந்துவீச்சாளர்களை வாங்கி இருக்கிறோம். தற்போது எங்கள் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களை பார்த்தால் அனுபவம் உள்ளவர்களாக இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -