இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் தற்போது ஒரு நாள் அணியில் மிகவும் முக்கியமான வீரராக இருக்கின்றார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் பல ஆட்டங்களில் முக்கியமான இன்னிங்ஸ் ஆடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் படைத்திருக்கிறார் இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியுள்ள முஹமது கையிப், அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், ஸ்ரேயாஸ் ஐந்து போட்டிகளில் விளையாடி 243 ரன்கள் அடித்திருக்கிறார்.
முகமது கையிப் பாராட்டு:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பல வீரர்கள் இந்திய அணியின் நம்பர் நான்காவது இடத்திற்கு வந்து போயிருக்கிறார்கள். யாராலும் அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனால் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு பெரிய தாக்கத்தை தனது பேட்டிங் மூலம் ஏற்படுத்தி வருகிறார். ஆனால் ஸ்ரேயாஸ், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு ஆட்டநாயகன் விருதை கூட அவருக்கு தரப்படவில்லை.ஸ்ரேயாஸ் பார்மை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஸ்ரேயாஸ் விளக்கம்:
ஏனென்றால் அவர் இந்திய அணிக்காக டெஸ்ட், டி20 என எதுவுமே விளையாடவில்லை. ஒருநாள் கிரிக்கெட் தான் ஆடி வருகிறார். ரஞ்சிப் போட்டியில் விளையாடிட்டு நேரடியாக இந்திய அணிக்கு வருகிறார். வந்தவுடனே தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை காட்டுகிறார் என்று முகமது கையிப் பாராட்டி உள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025- எப்பா சாமி.. என்னை விட்டுருங்க.. தேடி வந்த பொறுப்பை வேண்டாம் என விட்ட ராகுல்.. குழப்பத்தில் டெல்லி அணி
தனது ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ், தன் வாழ்நாளில் சரிவை சந்திக்கும் போதெல்லாம் ஒரு சிலர் மட்டுமே தம்மீது நட்புடன் இருப்பதாகவும், தமது பேட்டிங் வலுப்பெற்று இருப்பதற்கு என்னுடைய பயிற்சியாளர் சாகர், பிரவீன் ஆம்ரே மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர்தான் தமக்கு உறுதுணையாக இருப்பதாக ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். இதேபோன்று பயிற்சியாளர் சாகர் தம்மை கண்காணித்து முழு பயிற்சியையும் அழித்து வருவதாகவும் கூறியுள்ள அவருக்கு தான் முழு பாராட்டும் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார்.






