சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு நாக் அவுட் சுற்றில் கே.எல்.ராகுல் மிக முக்கியமானவராக இருந்தார். இந்த நிலையில் பும்ராவின் மனைவியான விளையாட்டு செய்தியாளர் சஞ்சனா கணேசனின் சில கேள்விகளுக்கு கே.எல்.ராகுல் சுவாரசியமாக பதில் அளித்திருக்கிறார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செமி பைனல் மற்றும் ஃபைனல் என இரண்டு மிக முக்கியமான போட்டிகளிலும் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மிக மெதுவாக விளையாடியதற்கு பரிகாரம் செய்து விட்டார்.
கேஎல்.ராகுலின் எழுச்சி
2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இருந்து கேஎல்.ராகுல் மிகச் சிறப்பான முறையில் விளையாடிகொண்டு வருகிறார். மிக முக்கியமாக அவருடைய விக்கெட் கீப்பிங் சிறப்பாக மாறி இருக்கிறது. தற்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதல் விக்கெட் கீப்பராக உயரம் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கே.எல்.ராகுல் பதில் அளித்த பொழுது “உண்மையாக நான் விக்கெட் கீப்பிங் செய்வது எனக்கு வேடிக்கையான ஒன்றாக இல்லவே இல்லை சஞ்சனா. ஸ்பின்னர்கள் பந்து வீசும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து எழ வேண்டும். ஏறக்குறைய நான் ஒவ்வொரு போட்டியிலும் இதை 250 முறை செய்தாக வேண்டும். இது மிகவும் கடினமான ஒரு விஷயம்”
எனக்கு பெரிய சவாலான காரியம்
“இந்திய அணியின் ஸ்பின்னர்கள் உலகத்தரமானவர்கள். மிகவும் திறமையானவர்கள். ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாகவும் இருந்தது. இப்படியான நிலையில் அவர்கள் அதை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் பந்துவீச்சுக்கு எதிராக நான் ஸ்டெம்புக்கு பின்னால் நிற்பது மிக மிக சவாலான காரியம். நான் என்னால் முடிந்த வரையில் அதை சிறப்பாக செய்து முடித்தேன்”
இதையும் படிங்க: 4 வருஷமா நாங்க முயற்சி செஞ்சதே வேற ஒரு விஷயத்துக்கு.. அது இப்ப கிடைச்சிருச்சு – ரோகித் சர்மா பேட்டி
“நான் பினிஷர் ஆக களம் இறங்கி விளையாடியதை ரசித்தேன். நான் கடந்த ஒரு வருடமாக எப்படி சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து யோசித்து வருகிறேன். விளையாட்டை ஆழமாக எடுத்துச் செல்வதோடு என்னுடைய அணியை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் யோசிக்கிறேன். எனது நாட்டிற்காக விளையாடி அணியை வெற்றி பெற வைக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






