சாம்பியன்ஸ் டிராபி 2025: வழங்கப்பட்ட மொத்த விருதுகள் மற்றும் பரிசுத்தொகை.. முழு விவரங்கள்

0
1076

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தி இருக்கிறது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி போராடி 49 ஓவர்களில் எட்டியது.

ரோகித் சர்மாவுக்கு விருது

இதன் மூலமாக இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. 

- Advertisement -

அதேபோல் தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திராவுக்கு அளிக்கப்பட்டது. 4 இன்னிங்ஸில் ஆடி 2 சதங்கள் உட்பட 263 ரன்களை குவித்ததற்காக தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிக விக்கெட்டுகளை நியூசிலாந்து அணியின் மேட் ஹென்ரி வீழ்த்தி இருக்கிறார்.

பரிசுத்தொகை எவ்வளவு?

மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதேபோல் அதிகபட்ச தனி நபரின் ஸ்கோராக ஆஃப்கானிஸ்தானின் இப்ராகிம் ஜத்ரானின் 177 ரன்கள் இன்னிங்ஸ் அமைந்துள்ளது. சிறந்த பவுலிங்காக வருண் சக்கரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் அமைந்துள்ளது. அதிக கேட்ச்களை விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் பிடித்துள்ளனர். 

- Advertisement -

இருவரும் மொத்தமாக 7 கேட்ச்களை பிடித்துள்ளனர். அதேபோல் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 5 கேட்ச், ஒரு ரன் அவுட் என்று 6 முறை விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி ஐசிசி தரப்பில் மட்டும் ரூ.19.24 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது இடத்தில் நிறைவு செய்த நியூசிலாந்து அணிக்கு ரூ.9.76 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -