ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த மாதத்தில் 22 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து வலிமையாக களம் இறங்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய போது நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் சீசன்
ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து 18வது சீசன் நடைபெற உள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 ஆம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் சென்னை அணி ஆரம்பிக்கப்பட்ட போது 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தவர், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கெப்ளர் வெசல்ஸ் ஆவார்.
அப்போதைய அணியில் முன்னாள் வீரர்களான மைக்கேல் ஹஸ்ஸி, ஸ்டீபன் பிளம்மிங் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் சென்னை அணியில் முக்கிய அங்கம் வகித்தார்கள். அப்போது இருந்து விளையாடி வரும் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு பவர் பிளேவில் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு அப்போதே நிர்ணயிக்கப்பட்டதாக சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
சுரேஷ் ரெய்னா ஆச்சரியம்
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்போது ” 2008 ஆம் ஆண்டு அப்போது சென்னை அணியில் தலைமை பயிற்சியாளராக இருந்த கெப்ளர் வெசல்ஸ் உடன் மீட்டிங் ஒன்றை நடத்தினோம். அதில் மேத்யூ ஹெய்டன், மைக்கேல் ஹசி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது கெப்ளர் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையை எங்களுக்கு பரிந்துரைத்தார். பவர் பிளேவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் வரை எட்டி இருக்க வேண்டும் என்று, ஆனால் 41 ரன்கள் ஆக எட்டப்பட்டது.
இதையும் படிங்க:இது இந்திய அணியின் சொந்த மைதானம்.. அவங்கதான் ஜெயிப்பாங்க.. மீண்டும் வம்பிழுக்கும் இங்கி முன்னாள் வீரர்
இருப்பினும் அப்போது மேத்யூ ஹைடன், இந்த இலக்கு வேண்டாம் முன்னேறிச் சென்று 80 ரன்கள் இலக்காக வைப்போம் என்று கூறினார். அதில் கேள்வி என்னவென்றால் 6 ஓவர்களில் இவ்வளவு பெரிய இலக்கை எப்படி அடைவது, என்கிற மனநிலை ஆதிக்கத்தை நோக்கி மாறியது. பொதுவாக அதற்கு தகுந்தவாறு அணுகுமுறை மாறியது, நம்பிக்கை உருவானது. அதனால் வீரர்களின் தன்னம்பிக்கை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக மாறியது” என்று கூறி இருக்கிறார்






