ரோகித் கிரிக்கெட் எதிர்காலம்.. கேப்டனுக்கு கோலியிடம் பேசும் பிசிஐஐ.. மேலும் 2 வீரர்கள் – வெளியான தகவல்கள்

0
504
Virat

இந்திய அணியின் கேப்டனாக தற்போது இருந்து வரும் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் எப்படியானதாக இருக்கும்? என்பது குறித்து பிசிஐஐ தரப்பில் இருந்து சில முக்கியமான விஷயங்கள் வெளியாகியிருக்கின்றன.

தற்போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விகளுக்கு தற்போது சாம்பியன் டிராபி தொடரை வெல்வது மிக முக்கியமானதாக அமைகிறது.

- Advertisement -

நிறுத்தி வைக்கப்பட்ட சம்பள ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய சம்பள ஒப்பந்த பட்டியல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்ததும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் அவர் கேப்டனாக தொடர்வதைப் பற்றி பேசி முடிவெடுத்து விட்டு பிறகு சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

ரோகித் சர்மா தன்னுடைய ஓய்வு குறித்து தானே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் அவர் தொடர்ந்து கேப்டனாக இருப்பது பற்றி பேசி தான் முடிவு செய்ய முடியும் எனவும், அடுத்தடுத்த உலகக் கோப்பைக்கு தொடர்ந்து அணியில் விளையாடுவது 100% உறுதியான வீரருக்கு கேப்டன் பொறுப்பை பிசிசிஐ தர விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

விராட் கோலி இடம் பேசிய பிசிசிஐ

மேலும் விராட் கோலியிடமும் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேட்கப்படும் எனவும், மேலும் அவர் கேப்டனாக தொடர்வதற்கு விரும்புகிறாரா என்பது குறித்தும் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எந்தவித கவலைகளும் இல்லை என்று செய்தி தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : இந்திய அணி ஒரே இடத்தில் இருக்கிறது மட்டும் இல்ல.. இங்க இந்த பிரச்சனையும் இருக்கு – மிட்சல் சான்ட்னர் பேட்டி

இத்துடன் ரோகித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக செயல்படுவது சந்தேகம் என்கின்ற காரணத்தினால் அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான ரேஸில் கில் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இருக்கிறார்கள் என்றும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்த டெஸ்ட் கேப்டன் ரேஸில் ரிஷப்மென்ட் வெளியேறிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -