மெக்கலம் தோத்துட்டு எப்படி ரிலாக்ஸா இருக்கீங்க?.. கோச் ஆன்டி பிளவர பார்த்து கத்துக்கோங்க – குக் விமர்சனம்

0
430
Cook

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் மிகவும் ரிலாக்ஸ் ஆக இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் விமர்சனம் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து அணி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சரிவை தற்பொழுது சந்தித்து கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் அந்த அணி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இணையாக உலக கிரிக்கெட்டில் மிகப்பெரும் அணியாகவும் இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது இங்கிலாந்து அணியை சீரமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் வெற்று ஆடம்பரங்கள்

நவீன கிரிக்கெட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை இங்கிலாந்து அணுகும் அணுகுமுறை தான் மிகவும் சரியானது என்பது போலான தோற்றம் இருந்தது. அவர்களும் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்துக் கொண்டு அதிக ரன்களை குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

இதைத்தொடர்ந்து அதிரடி இங்கிலாந்து வீரர்களில் சிலர் ஓய்வு பெற, சிலர் பார்மை இழக்க, உள்ளே வந்த இளம் இங்கிலாந்து வீரர்கள் அதே அதிரடியை தொடர்ந்தார்கள். ஆனால் பழைய வீரர்கள் போல அவர்களால் வெற்றிகரமாக அதிரடி ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து வெள்ளை பந்து கிரிக்கெட் விழுந்திருக்கிறது. மேலும் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் பிரண்டன் மெக்கலம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கொண்டு வந்த அதிரடி முறையால் ரன்கள் வருகிறது ஆனால் வெற்றிகள் வருவதில்லை. எனவே தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் மிகவும் சரிந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

எப்படி இப்படி இருக்கிறார்கள்?

இதுகுறித்து அலைஸ்டர் குக் கூறும்பொழுது ” நான் என்னுடைய தயாரிப்புகளில் எப்பொழுதுமே அதிக பந்துகளை வலைகளில் எதிர்கொண்டு அடித்து விளையாடியிருக்கிறேன். இப்படித்தான் என்னுடைய செட்டப்பில் இங்கிலாந்து அணி இருந்தது. ஆனால் தற்போது பிரண்டன் மெக்கலம் மற்றும் ஸ்டோக்ஸ் செட்டப்பில் பார்க்கும் பொழுது அப்படி எதுவும் இல்லை. அவர்கள் எப்படி இவ்வளவு ரிலாக்ஸாக இருக்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை. நான் இப்படி ஒரு நாளும் இருந்ததில்லை”

இதையும் படிங்க : மதியம் 4 மணி துபாய்.. காலை 7.30 மணி பாகிஸ்தான்.. எங்கள பார்த்தா எப்படி இருக்கு? – டேவிட் மில்லர் கோபம்

“நான் கிரகாம் கூச் உடன் இணைந்து அதிக பந்துகள் விளையாடினேன். பார்மில் இருக்கும் பொழுது அதை தொடர்வதற்காக நாம் அதிக பந்துகளை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆன்டி பிளவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த பொழுது அதிக பந்துகளை அவர் விளையாட வைத்தார். ஆனால் இப்பொழுது பெரிய பயிற்சிகளே இல்லாமல் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -