ஒரு இன்னிங்ஸ் சரியா ஆடலனாலும், தூக்கி போட்டுருவாங்க.. 32வது வயது இந்திய வீரர் குறித்து கும்ப்ளே கருத்து

0
119

சாம்பியன்ஸ் டிராபி  தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சேஸிங் செய்த போது கே எல் ராகுல் ஒரு முக்கியமான இன்னிங்ஸ் ஆடி இந்திய அணிக்கு வெற்றி பெற வைத்தார்.

34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கே எல் ராகுல் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.இதன் மூலம் இந்திய அணி 11 பந்துகள் எஞ்சிய நிலையில் 252 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில் கே எல் ராகுல் பேட்டிங் வரிசையில் நம்பர் ஆறாவது வீரராக களம் இறக்கப்படுகிறார். அவருக்கு முன்பாக அக்சர் பட்டேல் விளையாடுகிறார்.

- Advertisement -

இந்திய அணி செய்வது தவறு:

இந்திய அணி  நிர்வாகம் எடுக்கும் இந்த முடிவு தவறு என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “அரை இறுதியில் ராகுல் ஆடிய இன்னிங்ஸ் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவர் ஆடிய போது நான் கூட மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.”

“அக்சர் பட்டேலுக்கு முன்பே கே எல் ராகுலை களம் இறக்க வேண்டும் என்று கூறி வந்தேன்.அக்சர் பட்டேல் பேட்டிங்கில் நல்ல ஒரு செயல்பாட்டை தான் வெளிப்படுத்தினார். விராட் கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் அந்தக் கட்டத்தில்  ராகுல் களமிறங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதை தான் அவர் செய்வார் என்பதை காட்டியிருக்கிறார்.”

- Advertisement -

ராகுலுக்கு அழுத்தம் ஏற்படுகிறது:

“கே எல் ராகுல் மீது கடும் அழுத்தம் ஏற்படுகிறது. அவர் சரியாக விளையாடினால் யாரும் பெரியதாக எதுவும் சொல்வதில்லை. அதுவே அவர் ஒரு இன்னிங்சில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவரை ஒட்டுமொத்த ரசிகர்களும் விமர்சித்து குறை கூறுகிறார்கள். இதனால் ராகுலுக்கு கடும் அழுத்தம் ஏற்படுகிறது.”

இதையும் படிங்க: நவம்பர் 19 அன்று அதிக அளவு ட்ரோல் செய்யப்பட்டார்.. இப்போ அவர நினைச்சா சந்தோசமா இருக்கு – ஆகாஷ் ஷோப்ரா

“கடந்த போட்டியில் கூட அவர் இதை தான் சந்தித்தார். ஆனால் இன்று தான் யார் என்பதை அனைவருக்கும் நிரூபித்து காட்டியிருக்கிறார் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் மொத்தமாக ராகுல் 106 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ராகுலுக்கு பதில் ரிஷப் பண்டை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் கம்பீர்தான் ராகுலுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -