நேற்று சாம்பியன்ஸ் டிராபி இன் முதல் செமி பைனல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நகர்வு சரியாக இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது ஐசிசி மூன்று வடிவங்களில் நான்கு தொடர்களை நடத்திக் கொண்டு வருகிறது. இந்த நான்கு தொடர்களிலும் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன் என்கின்ற சாதனைக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சொந்தக்காரராக இருக்கிறார். இப்படியான நிலைமையில் அவருடைய கேப்டன்சி குறித்து ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தியின் தேர்வு
நடப்பு சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைவாக இருக்கிறார். மிடில் ஓவர்களில் தாக்கத்தை தரும் பும்ரா இல்லாத காரணத்தினால், எக்ஸ்பேக்டர் தன்மை கொண்ட யாராவது ஒரு பந்துவீச்சாளர் தேவை என்று வருண் சக்கரவர்த்தியை உள்ளே கொண்டு வந்தார்கள்.
முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு தராத அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கொடுத்தார்கள். அந்தப் போட்டியை சரியாக பயன்படுத்தி ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி, நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக செமி பைனலில் முக்கிய விக்கெட்டான ஹெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் திருப்பு முனையை உருவாக்கி கொடுத்தார்.
கேப்டன் ரோஹித் சர்மாவின் தவறு
அதே சமயத்தில் ஹெட் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரையில் வருண் சக்கரவர்த்தியை ஹெட்டுக்கு எதிராக முதல் ஓவரிலேயே பயன்படுத்த வேண்டும் என்று கூறி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று அப்படி கேப்டன் ரோஹித் சர்மா அவரை பயன்படுத்தவில்லை.
இதையும் படிங்க: இந்திய அணி ஒரே இடத்தில் ஆடறது பிரச்சனையா?.. நான் தோல்வியை ஏத்துக்கிறேன் – கேப்டன் ஸ்மித் பேட்டி
இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “நீங்கள் ஹெட்டுக்கு எதிராக வரும் சக்கரவர்த்தியை கொண்டு வருவதற்கு எதற்கு 9 ஓவர்கள் வரையில் காத்துக் கொண்டிருக்க வேண்டும்? பிறகு அவரை அணியில் வைத்திருந்து என்ன பயன்? முகமது ஷமி உடன் அவரை வைத்து ஆரம்பத்திலேயே துவங்கியிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் தேவையில்லாமல் அவர்களுக்கு 49 ரன்கள் நாம் அங்கு கொடுத்தோம் என்பதை சாட்சி” என்று கூறியிருக்கிறார்.






