இந்திய அணி துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவது தங்களுக்கு பிரச்சனை இல்லை என நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்திய அணி தன்னுடைய அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் வைத்து விளையாடுகிறது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்றால் துபாய் மைதானத்தில் மட்டுமே ஐந்து போட்டிகள் கிடைக்கும். இதனால் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகத்தை உருவாக்குகிறது என பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் சாக்கு சொல்ல மாட்டோம்
இது குறித்து நியூசிலாந்து நட்சத்திர வீரர் கிளன் பிலிப்ஸ் பேசும் பொழுது “எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இப்படியான விஷயங்களில் எந்த சாக்குப் போக்கும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம். இதுகுறித்து எங்களுக்கு எந்தவிதமான கவனமும் கிடையாது. நீங்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு வருவதற்கு விஷயங்களை சமாளிக்க வேண்டும். நாங்கள் விஷயங்களை சமாளித்திருக்கிறோம் இந்திய அணியும் விஷயங்களை சமாளித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது”
“மேலும் நாங்கள் கண்டிஷன் மற்றும் சில விஷயங்கள் குறித்து எந்த விதமான புகாரையும் கூற மாட்டோம். எங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் எங்களை மாற்றி அமைத்துக் கொள்ளவே முயற்சி செய்வோம். இந்த விஷயம் சம்பந்தமாக பேசுவது எல்லாமே முட்டாள்தனமானது கிடையாது. அதே சமயத்தில் நாங்கள் எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் உள்ளடக்கி இருக்கிறோம் என்று நினைக்கிறேன்”
இந்திய அணியை நாங்கள் வெல்வோம் :
“வெளிப்படையாக வெள்ளைப் பந்து கிரிக்கெட் என்பது மிகவும் வித்தியாசமான ஒரு கிரிக்கெட் வடிவம். நீங்கள் இப்படியான பெரிய தொடர்களை எடுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது, இந்தத் தொடருக்குள் தற்போது நல்ல பார்மில் இருக்கக்கூடிய வீரர்கள் பலர் உள்ளே வருவார்கள்”
இதையும் படிங்க : இந்தியாவுக்கு செமி பைனலில் ஆஸிதான் வேணும்.. ஆனா ஒரு விஷயத்தை நம்ப மாட்டேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி
“சமீப காலத்தில் நாங்கள் இந்திய அணிக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு இந்தியாவுடன் மோத இருப்பதில் இது நல்ல நம்பிக்கையை கொடுக்கும். எனவே நாங்கள் இந்திய அணியை வெல்ல முடியும் என்று நம்புகிறோம். அதே விஷயத்தில் நாங்கள் நல்ல விஷயங்களை திரும்ப செய்ய வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






