ஐசிசியின் இந்த 2 விதிகள் மோசம்.. இந்திய அணியின் சுழல் ஆதிக்கத்தையே அழிச்சிடும் – அஸ்வின் பேட்டி

0
82

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு விதிகள் இந்திய சுழற் பந்துவீச்சை அழிக்கும் வகையில் இருப்பதாக சில முக்கியமான கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஐசிசியின் இரண்டு விதிகள்

கிரிக்கெட் என்பது பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக சமீப காலங்களில் மாறி வருகிறது. டி20 கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க குறைந்த பந்துகள் கொண்ட தொடராக அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சுவாரசியத்தை அதிகப்படுத்த பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இரண்டு புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் இன்னிங்ஸ் இறுதிக்கட்டத்திலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்னிங்ஸ் முடிவில் ஐந்து பீல்டர்கள் உள்ளே நிறுத்தப்படுவதால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் அடிக்கும் வகையில் இருப்பதாகவும் இது இந்திய சுழற் பந்துவீச்சின் சக்தியை ரத்து செய்யும் வகையில் இருப்பதாக அஸ்வின் சில கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதை நீக்க வேண்டும்

இதுகுறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டி20 போட்டிகள் அதிக அளவு ஈர்ப்பு கொண்டதாக உள்ளது, ஏனென்றால் அது நான்கு மணி நேரத்திற்குள் ஒரு ஆட்டம் முடிவடைகிறது. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளின் முதல் தர அமைப்பு நன்றாக மேம்பட்ட உடன் பெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:WC பைனலில் ஆஸி அணியிடம் தோற்றது உண்மைதான்.. ஆனா இந்த விஷயத்தை நீங்க மறக்கக்கூடாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 2013 மற்றும் 14ஆம் ஆண்டுகளில் ஒரு பந்தில் மட்டுமே விளையாடப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு, ஐந்து பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் அனுமதிக்கப்படும் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னர் இரண்டு பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பல வழிகளில் அந்த விதி இந்தியாவின் சுழல் ஆதிக்கத்தை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று நான் நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே ஆகும். எனவே இது 2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பைக்கு முன்பாக இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” என்று அஸ்வின் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -