இன்று நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்தாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தங்கள் அணியில் மிகவும் எரிச்சல் ஊட்டக்கூடிய நபர் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா போட்டி ரத்து
இந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அந்த அணி வெற்றி இலக்காக 351 ரன்கள் நிர்ணித்தாலும், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 47 ஓவர்களில் 356 ரன்கள் குறித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையிலும் ஐசிசி தொடரில் தாங்கள் எப்போதுமே வலுவான அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி, மழையால் ரத்தாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் இந்த தொடர் குறித்தும் தங்கள் அணி குறித்தும் சில முக்கியமான கருத்துகளை பேசி இருக்கிறார். மேலும் தனது அணி வீரர் மார்னஸ் லபுஷேன் ஏதாவது தொந்தரவு செய்து கொண்டே இருப்பார் எனவும், எரிச்சல் ஊட்டக்கூடிய நபர் அவர்தான் எனவும் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
எரிச்சல் ஊட்டக்கூடிய நபர்
இதுகுறித்து ஸ்மித் விரிவாக கூறும்போது ” நான் வானிலை அறிக்கை குறித்து அதன் தகவலை பார்த்தேன், மழை நன்றாக பெய்திருந்தது. எனவே இதை எங்களால் எதுவும் செய்ய முடியாது. மார்னஸ் பற்றி கூற வேண்டும் என்றால் உண்மையாகவே அறை முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொருவரையும் ஏமாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். மேலும் எங்களில் சிலர் மழை பெய்த போது உட்கார்ந்து கொண்டு குறுக்கெழுத்துப் புதிர்களை சரி செய்து கொண்டிருந்தோம்.
இதையும் படிங்க:எம்எஸ் தோனியே நினைச்சாலும்.. பாக் அணியை வழிநடத்த முடியாது.. இந்த விஷயம் அவர்களிடம் இல்ல – முன்னாள் பாக் கேப்டன்
மழையை பார்த்துக் கொண்டே கொஞ்சம் விளையாடி இருந்தால் எவ்வளவு ஸ்கோர் நாங்கள் அடித்திருப்போம் என்று குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தோம். சமன்பாடு இப்போது எளிது, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களுக்குள் செல்வதற்கான வழியை கண்டறிய வேண்டும். மேலும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மிகவும் ஆபத்தான அணி. நாளின் முடிவில் அவர்களுடைய நாளாக அது இருந்தால் அது எங்களுக்கு கடினமாகிவிடும். முதல் எட்டு சிறந்த அணிகள் மோதிக்கொள்வதே இந்த தொடரின் சிறப்பம்சமாகும்” என்று பேசி இருக்கிறார்.






