இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் முக்கியமான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்தப் போட்டியின் போது மைதானத்தை முழுவதுமாக மூடி வைக்காதது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் முக்கிய போட்டி நடைபெற இருந்தது. இந்த நிலையில் அங்கு காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால், போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் முடித்துக் கொள்ளப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
திடீரென்று சிக்கிய தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் தன்னுடைய பிரிவில் இடம்பெற்று இருக்கும் பெரிய அணியான இங்கிலாந்து வென்று ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியில் ஆறு நட்சத்திர வீரர்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு தனது பிரிவில் இருக்கும் இன்னொரு பெரிய அணியான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக டிரா ஆகி இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி உடன் வென்றால் போதும்!
அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வென்று இருந்தது. இந்த நிலையில் தனது பிரிவில் பெரிய அணியான இங்கிலாந்து அணியை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலைக்கு தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணி தள்ளப்பட்டு இருக்கிறது. வலிமையாக பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணிக்கு திடீரென அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
முகமது கைஃப் விமர்சனம்
தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி கைவிடப்பட்ட ராவல்பிண்டியில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது மைதானம் முழுமையாக மூடி வைக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதற்கு ஐசிசி கொடுத்த பணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு புத்திசாலித்தனமாக பயன்படுத்தியதா? என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஹாட்ரிக் விக்கெட்டை கெடுத்ததுக்கு.. ரோகித் சொன்ன வாக்கை காப்பாற்றினாரா? – அக்சர் படேல் விளக்கம்
இது குறித்து விமர்சித்திற்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என முக்கிய அணிகள் மோதிக் கொள்ளும் ஒரு போட்டியின் போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில், மைதானம் முழுமையாக மூடி வைக்கப்படாதது வெட்கக்கேடானது. இந்த முக்கியமான விஷயம் குறித்து யாருமே கண்டு கொள்ளவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதற்கு பாகிஸ்தானுக்கு ஐசிசி கொடுத்த பணம் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.






