பாகிஸ்தான் அணி நாளை இந்திய அணிக்கு எதிராக தனது இரண்டாவது லீக் போட்டியில் விளையாட உள்ளது. இதில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக பாபர் அசாம் இருக்கும் நிலையில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா முதல் போட்டியில் பாபர் அசாம் நாட்டுக்காக விளையாடவில்லை என்று பரபரப்பான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆமை வேகத்தில் பாபர் அசாம்
சாம்பியன் டிராபி தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் முதல் போட்டியில் இதே நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 320 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 90 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதாவது வெற்றி பெறக்கூடிய ரன்கள் 300க்கும் அதிகமாக இருக்கும்போது பாபர் அசாம் ஆமை வேகத்தில் ஆடியது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரையும் வெறுப்படைய வைத்தது. இந்த சூழ்நிலையில் அவர் நாட்டுக்காக விளையாடவில்லை தனது சொந்த சாதனைகளுக்காக மட்டுமே விளையாடுகிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தினேஷ் கணேறியா பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நாடு தான் முதலில் முக்கியம்
இதுகுறித்து தினேஷ் கண்ணேறியா கூறும் போது ” பாபர் அசாம் பற்றி பேசும் போது அவர் தனக்காகவே விளையாடுகிறார் என்று தோன்றுகிறது. அவர் அழுத்தத்தில் இருக்கும் போது தனது புள்ளி விவரங்களையும் மற்றும் ஐசிசி தரவரிசையும் நிலை நிறுத்திக் கொள்ள செயல்படுகிறார். நீங்கள் அரைசதம் அடித்து விட்டீர்கள், உங்கள் வேலையை செய்தீர்கள், ஆனால் அணி எங்கே வெற்றி பெற்றது?
இதையும் படிங்க:80 சதவீத பாகிஸ்தான் மக்களே இப்படி சொல்வது.. என் வாழ்வில் முதன்முறை.. நம்பவே முடியல.. பாக் முன்னாள் வீரர் வியப்பு
சல்மான் அலி ஆகாவும் குஷ்தில் ஷாவும் சிறப்பாக விளையாடினார்கள். அந்த இரண்டு வீரர்களும் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்கள் குவிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதற்கு பதிலாக 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும். நீங்கள் விளையாடினால் முதலில் நாட்டுக்காக விளையாட வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம். பின்பு தான் உங்களுக்காக கொஞ்சம் விளையாட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாபரால் அதை செய்ய முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.






