கோலிக்கு ரன் அடிக்காததை விட.. இத பத்தி தான் ரொம்ப கவலை.. நல்லாவே தெரியுது – ராபின் உத்தப்பா பேட்டி

0
687

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.இந்த சூழலில் 229 ரன்கள் என வங்கதேசம் நிர்ணயித்த வெற்றி இலக்கை கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இந்த சூழலில் மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி 38 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 22 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். விராட் கோலி தன்னுடைய முதல் ரன்னை எடுக்க 10 பந்துகளை எடுத்துக் கொண்டார்.இது இந்திய ரசிகர்களை கொஞ்சம் வேதனை அடைய செய்திருக்கிறது.

- Advertisement -

மனதளவில் இருக்கும் சிக்கல்:

மேலும் விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கடுமையாக தடுமாறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா,” விராட் கோலி மிகச் சிறந்த வீரர். அவருக்கு இருக்கும் பிரச்சனையை அவர்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் மனதளவில் அவருக்கு சில என்ன ஓட்டங்கள் பேட்டிங் செய்யும்போது இருக்கின்றது”.

“விராட் கோலியின் பேட்டிங்கை வெளியில் இருந்து பார்க்கும்போது அவர் ஒவ்வொரு பந்தையும் பேட்டில் நடுவில் பட்டு அடிக்க வேண்டும் என்பதிலே குறியாக இருக்கின்றார். ஆனால் அவர் நன்றாக பேட்டிங் செய்து ரன்கள் எடுப்பதில் மட்டும்தான் குறியாக இருக்க வேண்டும். பேட்டில் பந்து எங்கு படுகிறது என்பதை பற்றி எல்லாம் கவலை ப்படக்கூடாது”.

- Advertisement -

ராபின் உத்தப்பா அறிவுரை:

“ஏனென்றால் ரன் அடிக்க வேண்டும் என்பதில்தான் உத்வேகம் இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களுக்கும் நடுவே தான் அவர் சிக்கிக் கொண்டு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதிலிருந்து வெளிவர கொஞ்ச காலம் தான் ஆகும்”.

“இதையெல்லாம் மறந்து தனது என்ன ஓட்டங்களை கட்டுப்படுத்திக் கொண்டு விராட் கோலி தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் ரன்கள் அவருக்கு கிடைக்கும். இதற்காக எந்த ஒரு பேட்டிங் மாற்றத்தையும்,அவர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விராட் கோலி நல்ல பார்மில் இருக்கும்போதெல்லாம் அவருடைய பேட் இரண்டாவது அல்லது மூன்றாவது ஸ்லிப் நோக்கி இருக்கும்”.

இதையும் படிங்க-பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் இல்ல.. ஆனா என்கிட்ட இத சொன்னாரு.. நல்லா வீச அது தான் காரணம் – ஹர்ஷித் ராணா பேட்டி

“இப்படி விளையாடும் போது தான் அவர் ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஆனால் தற்போது அவருடைய பேட் விக்கெட் கீப்பர் அல்லது முதல் ஸ்லிப் நோக்கி தான் வருகிறது. இதன் காரணமாக அவர் அபாயகரமாக விளையாடி ஆட்டம் இழக்கின்றார். இதை விராட் கோலியே கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்.இது குறித்து யாரேனும் விராட் கோலியிடம் பேசுவார்கள் என நான் நம்புகிறேன். இந்த ஒரு மாற்றம் அவருக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்” என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

- Advertisement -