IML டி20 2025: சச்சின் தலைமையில் ஆடும் இந்தியா.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்.?. தொடங்கும் நாள் மற்றும் நேர விபரங்கள்

0
593
International Masters League T20 2025

2025ம் ஆண்டுக்கான இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாஸ்டர்ஸ் லீக் தொடர் அடைந்துள்ள வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. சர்வதேச ஜாம்பவான்கள் விளையாடும் ஆட்டம் என்பதால், கிரிக்கெட்டின் பழைய ரசிகர்களும் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர்.

இம்முறை இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடர் பிப்.22ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 16ம் தேதி முடிவடையவுள்ளது. அதாவது ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. பிப்.22 முதல் மார்ச் 12 வரை லீக் போட்டிகளில், மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அரையிறுதி ஆட்டமும், மார்ச் 16 இறுதிப் போட்டியும் நடக்கவுள்ளது.

- Advertisement -

இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் 6 அணிகள்

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தரப்பில் இம்முறை சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இந்திய ஜாம்பவான்கள் அணியை வழிநடத்தவுள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ராயுடு உள்ளிட்டோரும் விளையாடுகின்றனர்.

இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடர் 3 மைதானங்களில் நடக்கவுள்ளது. மும்பை டிஒய் பாட்டில் மைதானம், வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானம் மற்றும் ராய்ப்பூரில் உள்ள ஷாகித் வீர் நாராயண் சிங் மைதானம் தேர்வு செய்யப்பட்டு நடக்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

இந்திய அணி முதலில் இலங்கை அணியையும், பின்னர் இங்கிலாந்து அணியையும், தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடுகிறது. பின் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ளது. மொத்தமாக 5 லீக் போட்டிகளில் இந்திய ஜாம்பவான்கள் விளையாடுகின்றனர்.

ஒளிபரப்பு விவரம்

இந்த இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. இதனால் அனைத்து நாடுகளின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ஓப்பனாவே சொல்றேன்.. இனிமேல் கிரிக்கெட்டை இப்படித்தான் ஆட போறேன்.. ஐபிஎல் 2025 முன் மவுனம் கலைத்த தோனி

இந்திய மாஸ்டர்ஸ் அணி விவரம்: சச்சின், யுவராஜ் சிங், ரெய்னா, அம்பாதி ராயுடு, யூசுப் பதான், இர்பான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்னி, வினய் குமார், ஷபாஸ் நதீம், ராகுல் சர்மா, நமன் ஓஜா, பவன் நெகி, குர்கீரத் சிங் மான், அபிமன்யூ மிதும்

- Advertisement -