இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது தோல்வியை தங்களுடைய நகைச்சுவைக்கு பின்னால் மறைக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா வந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு நான்கு என தோற்றது. இதற்கு அடுத்து விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை மொத்தமாக தோற்றது. ஆனால் இந்த தோல்விகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இங்கிலாந்து சம்பந்தமில்லாத காரணங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
டக்கெட் சர்ச்சை பேச்சு
இங்கிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று இருந்த பொழுது மீதமுள்ள ஒரு போட்டியை தோற்று தொடரை முழுவதுமாக இழந்தாலும் கூட, சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் முக்கியம் அதை நாங்கள் செய்வோம் என்று கூறியிருந்தார். இதை இங்கிலாந்து முன்னாள் வீரர்களே கண்டிக்க செய்திருந்தனர்.
இதேபோல முன்பு இந்தியாவுக்கு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட வந்த பொழுது ஜெய்ஸ்வால் மிக அதிரடியாக விளையாடுவதற்கு காரணம் தங்களுடைய பாஸ்பால் அணுகுமுறையை அவர் பின்பற்றுவதுதான் என்றும், அவர் இப்படியான அதிரடியை தங்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் சர்ச்சையான முறையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி பண்றத நிறுத்தனும்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்லும் பென் பக்கட் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர்கள் தோல்வி அடைந்தது அவர்களுடைய தன்னம்பிக்கையை பெரிதாக பாதிக்கும். ஏற்கனவே அவர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதற்கு தங்களின் பாஸ்பால் முறையை பார்த்தே அதிரடியாக விளையாட கற்றுக் கொண்டார் என்று கூறியிருந்தார்”
இதையும் படிங்க : 6 பந்தில் 6 சிக்ஸ்.. சூரியகுமார் பாய் உடனே மெசேஜ் செய்தார்.. அந்த 2 பேர சந்திக்கணும் – பிரியன்ஸ் ஆர்யா பேட்டி
“டக்கெட் காமெடி செய்வதற்கு எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த விஷயங்கள் நகைச்சுவை கிடையாது. இது உங்கள் தோல்விகளை நகைச்சுவைக்கு பின்னால் மறைப்பது ஆகும். உங்களுடைய கடைசி ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் செயல்பாடு மோசமாக இருந்தது. இது ஏதோ மூன்று மாதம் நான்கு மாதங்களில் வரவில்லை. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு இருக்கும் திறமைக்கு அவர்கள் நியாயமாக விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.






