சாம்பியன்ஸ் டிராபி டி20 கிடையாது.. இந்த வீரரால இந்திய அணி சிக்கப்போகுது.. அவர விடாதிங்க – டேவிட் லாயிட் கருத்து

0
690
David

நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் ஒரு குறிப்பிட்ட இந்திய வீரர் மிகவும் சிரமப்படுவார் எனவும் எதிரணிகள் அவரை நோக்கி திட்டமிட்டு விளையாட வேண்டும் எனவும் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் கூறியிருக்கிறார்.

இந்திய அணி நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் துபாய் மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக முதல் சுற்றில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பெரும் பின்னடைவு

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து பேச்சாளர் பும்ரா காயத்தின் காரணமாக விளையாடவில்லை. தனி ஒரு வீரராக போட்டியை வென்று கொடுக்கக்கூடிய திறன் படைத்த அவர் விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. அவருக்கான மாற்று வீரர் இந்திய அணியில் மட்டும் இல்லை உலகிலேயே கிடையாது.

எனவே பும்ரா இடத்தை எப்படியாவது நிரப்புவதற்காக இந்திய தேர்வுக் குழு முயற்சி செய்து அர்ஸ்தீப் சிங்கை கொண்டு வந்திருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இன்னும் நல்ல முறையில் செயல்பட ஆரம்பிக்கவில்லை. மேலும் முகமது ஷமி மட்டுமே இதில் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். ஆனால் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா தற்பொழுது தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது சிறிய விருந்து கிடையாது

இதில் அர்ஸ்தீப் பின் குறித்து பேசி இருக்கும் டேவிட் லாயிட் கூறும் பொழுது ” நீங்கள் மிக உறுதியாக பும்ராவை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இழக்க போகிறீர்கள் என்பது உண்மை. இப்படியான உலகின் தலைசிறந்த ஒரு வீரரை நீங்கள் இழக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் அந்த இழப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்”

இதையும் படிங்க : தோனி மாதிரியே ரஜத் பட்டிதாருக்கும் நடக்கும்.. விராட் ஆர்சிபி கேப்டனா வராத காரணம் இதுதான் – ஸ்ரீகாந்த் பேச்சு

“உண்மையில் நீங்கள் எதிரணியாக இருந்தால் அர்ஸ்தீப் சிங்கை சோதனை செய்யுங்கள். அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட முயற்சி செய்யுங்கள். இது டி20 கிரிக்கெட் கிடையாது. இது ஒரு சிறிய விருந்தும் கிடையாது. ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் நீங்கள் சென்று மீண்டும் மீண்டும் போட்டியில் திரும்ப வந்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எதிரணியாக இருக்கும் பொழுது இவருக்கு எதிராக முயற்சி செய்து விளையாடுங்கள். அவருக்கு என்ன கிடைக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -