சாம்பியன்ஸ் டிராபி.. கெவின் பீட்டர்சனின் இந்திய பிளேயிங் XI.. கம்பீருக்கு எதிர் ரூட்.. 2 இரண்டு முக்கிய மாற்றம்

0
562
Pietersen

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்டிருக்கிறார். இதில் கம்பீருக்கு எதிர் நிலைப்பாடு கொண்டு தேர்வு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தற்போது தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது.

- Advertisement -

நான் இப்படித்தான் செல்வேன்

தான் தேர்ந்தெடுத்துள்ள இந்திய பிளேயிங் லெவன் குறித்து பேசி இருக்கும் கெவின் பீட்டர்சன் “விராட் கோலி ரன்கள் எடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள் தற்பொழுது அது நடந்திருக்கிறது. ரோகித் மற்றும் கில் நல்ல பார்ட்னர்ஷிப்பை மேலே கொடுத்தார்கள். அதே சமயத்தில் கேஎல்.ராகுல் ஐந்தாவது இடத்தில் விளையாட வேண்டும். அவர் 12 பந்தில் 30 ரன்கள் அடிக்கும் வீரர் கிடையாது. அவர் விளையாட குறைந்தபட்சம் ஒரு 15 ஓவர்கள் இருக்க வேண்டும்”

“வருண் சக்கரவர்த்தி மிகவும் நன்றாக இருக்கிறார். ஆனால் இருந்தபோதிலும் தான் தயாரித்தவற்றிலும் செயல்பட விதத்திலும் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற தகுதி ஆகிறார். எனக்கு ஒரு இடது கை சீமர் பிடிக்கும். எனவே நான் அர்ஸ்தீப் சிங்கை வைத்துக் கொள்கிறேன். மேலும் இவருடன் ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா இருப்பார்கள். இதற்கு அடுத்து முதலில் ஜடேஜா, அடுத்து அக்சர் படையல் என்று கூறியிருக்கிறார்”

- Advertisement -

கெவின் பீட்டர்சன் இரண்டு முக்கிய மாற்றம்

கெவின் பீட்டர்சன் அறிவித்திருக்கும் தன்னுடைய இந்திய பிளேயிங் லெவனில் கம்பீர் ஆறாவது இடத்தில் களம் இறக்கிய கேஎல்.ராகுலை ஐந்தாவது இடத்தில் களம் இறக்குவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ஹர்ஷித் ராணாவை தன்னுடைய அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “நாங்க தான் சாம்பியன் ஆவோம்.. ஏன் தெரியுமா?.. இந்த ரெண்டு காரணத்தால்தான்!” – பாகிஸ்தான் சதாப் கான் ஆச்சரியமான சவால்!

கெவின் பீட்டர்சன் இந்திய பிளேயிங் லெவன் : ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் அர்ஸ்தீப் சிங்.

- Advertisement -