சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் திடீரென ஓய்வை அறிவித்தது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் விமர்சனம் செய்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி ஆஸ்திரேலியா அணியில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தன்னால் விளையாட முடியாது எனவும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சிக்கலில் ஆஸ்திரேலிய அணி
நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் மிட்சல் மார்ஸ் என நான்கு முக்கிய வீரர்கள் காயத்தின் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறி இருக்கிறார்கள். இதனால் ஸ்மித் தற்பொழுது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு மாதம் கழித்து திடீரென ஓய்வு பெற்றது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. தன்னை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவே இவர் இதை அறிவித்திருந்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மாற்று வீரரை தேட நேரம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணியில் ஐபிஎல்
இது குறித்து பேசி இருக்கும் ஆரோன் பின்ச் கூறும் பொழுது ” உங்கள் மீது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் தேர்வு செய்வது குறித்து நம்பிக்கை வைத்திருக்கும் பொழுது இது சரியான முடிவாக இருக்க முடியாது. இந்த முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். நிச்சயம் ஆஸ்திரேலியா பயிற்சியாளர் உடன் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இது குறித்து பேசி இருப்பார்”
இதையும் படிங்க : 2025 சாம்பியன்ஸ் டிராபி.. ரூல்டு அவுட் ஆன 7 நட்சத்திர வீரர்கள்.. சுவாரசியம் குறையும் தொடர்
“இறுதியில் ஒவ்வொரு வீரருக்கும் தன்னுடைய எதிர்காலம் என்ன என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்தால் அவர் டி20 கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி விளையாடிக் கொண்டு வருகிறார். தற்பொழுது சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் விளையாட அவர் வரவேண்டும். இதற்கு நான்கு மாதங்கள் எடுக்கும். எனவே அவர் நீண்ட காலம் இந்தியா பக்கமாக இருப்பதற்காக ஓய்வை முன்கூட்டியே அறிவித்துவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.






