இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபிக்கு முன்பாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியது தொடர்பாக கபில்தேவ் விமர்சனம் செய்திருக்கிறார்.
உள்நாட்டில் நியூசிலாந்து மற்றும் வெளிநாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இந்திய அணி இழந்த பிறகு அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்நாட்டு கிரிக்கெட்டில் களம் இறங்கினார்கள்.
12 வருஷம் என்ன செஞ்சாங்க?
அப்போது இந்திய அணிக்கு அருகில் சாம்பியன்ஸ் டிராபி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடியது தொடர்பாக இந்திய லெஜெண்ட் கபில் தேவ் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அவர் இந்த கேள்விக்கு வேறு கோணத்தில் இருந்து பதிலளித்திருக்கிறார்.
இது குறித்து கபில்தேவ் பேசும் பொழுது “நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது தொடர்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பற்றி 12 ஆண்டுகளுக்கு பேசுவீர்கள் என்றால் அது எப்படி சரியானதாக இருக்க முடியும்? அவர்கள் ரன்கள் எடுக்காத காரணத்தினால் மட்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது. நீங்கள் சிறப்பாக இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் களம் இறங்கி விளையாட வேண்டும்”
குடும்ப சுற்றுலா கிடையாது
“நான் சொல்வது என்னவென்றால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ரன்கள் எடுத்திருந்தால், இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால், இவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவார்களா? நீங்கள் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்காதீர்கள். அமைப்பை பலப்படுத்தும் வேலையை பாருங்கள். ஒருவர் லட்சம் ரன்கள் எடுத்தாலும் சரி ஒருவர் பூஜ்ஜியுடன் எடுத்தாலும் சரி அவர்கள் இருவருமே உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : பும்ரா ஃபிட்டா இருக்கார்.. ஆனா அவர் ரூல்டு அவுட் ஆக காரணம் இவர்தான் – பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்கள்
” அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவிகளை கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதில் தவறு ஏதும் கிடையாது. ஆனால் உங்களுக்கு ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் இருக்கிறது என்றால் உங்களுடைய மனைவியை உங்களுடன் ஒரு வாரம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இது வீரர்களை ஒரே அணியாக இருக்க அனுமதிக்கும். மேலும் வீரர்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும். இது குழு உணர்வை அதிகரிக்கும். ஏனென்றால் கிரிக்கெட் தனிப்பட்ட விளையாட்டு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






