இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தற்போது இந்திய அணியில் செய்து வரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் வீரர்களுக்கு பாதுகாப்பு இன்மையையும், மேலும் அவர்களை காயப்படுத்தும் விதமாகவும் அமையும் என இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதுமே அனைவருமே சுயநலம் இன்றி அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் வீரர்கள் அணிக்காக எதையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். தற்பொழுது அவருடைய இந்த அணுகுமுறை தான் வீரர்களுக்கு பிரச்சினையை உண்டாக்குகிறது என்று கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் – கே.எல்.ராகுல் விவகாரம்
இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கி ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க கம்பீர் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் விராட் கோலி காயம் அடைந்த காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் கேஎல்.ராகுல் ஐந்தாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய பேட்டிங் பாதிக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அணிக்கு தேவை என்றால் நெகிழ்வு தன்மையுடன் எல்லோரும் எதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கம்பீர் நினைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு இன்மையை உருவாக்கும்
இதுகுறித்து ஜாகிர் கான் பேசும் பொழுது ” அணி நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள் அது சரிதான். ஆனால் அது ஒன்று இரண்டு இருக்கலாம். மேலும் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது. நீங்கள் வீரர்களை ஏன் விளையாட வைக்கவில்லை என அவர்களுக்கு சரியான முறையில் தகவல் தொடர்பை மேற்கொள்ள வேண்டும். இது விஷயங்களை ஒழுங்குபடுத்தும். நீங்கள் இதை செய்யவில்லை என்றால் வீரர்களுக்கு பாதுகாப்பு இன்மை உருவாகும். ராகுல் டிராவிட் இதை சரியாக செய்து வந்தார்”
இதையும் படிங்க : இவரு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரரு.. அதனால பழைய இடத்துக்கே அனுப்பிருங்க.. இந்திய வீரர் குறித்து பாசித் அலி பேட்டி
“டிராவிட் மற்றும் கம்பீர் அணுகுமுறையை ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் மாறுகிறது. இதில் நல்லது கெட்டது என்று நீங்கள் நிறைய சொல்லலாம். இங்கு வீரர்கள் முதல் கொண்டு தேர்வாளர்கள் வரை ஒவ்வொருவரும் இந்த சிஸ்டத்தை ஒரு அங்கம். அவர்கள் அனைவருமே சரியாக பராமரிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் சக்கரம் ஒழுங்காக சுழலத் தொடங்கி இந்த சிஸ்டம் சரியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






