நம்பிக்கையோடு இருந்தேன்.. அவர் செஞ்ச சம்பவத்தால எல்லாமே மாறிடுச்சு.. ரொம்ப சோதிக்கிறாரு – ஜாஸ் பட்லர் பேட்டி

0
1053

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி தோற்றதற்கான முக்கிய காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி சிறப்பான வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்க வீரர் டக்கட் 65 ரன்கள் மற்றும் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ஜோ ரூட் 69 ரன்கள் மற்றும் மிடில் வரிசை ஆட்டக்காரர் லிவிங்ஸ்டன் 41 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளின் உதவியோடு 34 ரன்கள் குவித்தார்.

நிச்சயமாக இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு முன்பாக இந்திய அணியை வீழ்த்தி விடலாம் என்று தான் இங்கிலாந்து அணியின் திட்டம் இருக்கும். ஆனால் அந்தத் திட்டத்தை ரோகித் சர்மா தவிடு பொடியாக்கினார். தான் களம் இறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடிய நிலையில் 90 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸ் என 119 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் பட்லர் தோல்விக்கான காரணம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சில வருடங்களாக இதைத்தான் செய்கிறார்

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “நாங்கள் நேற்றைய போட்டியில் நிறைய விஷயங்களை சிறப்பாக செய்தோம் என்று நினைத்தேன். குறிப்பாக பேட்டிங்கில் நல்ல நிலையை அடைந்தோம். எங்களை 350 ரன்கள் நிலைக்கு எடுத்துச் செல்ல யாராவது ஒருவர் தேவைப்பட்டனர். இந்தப் போட்டியின் பாராட்டு முற்றிலும் ரோஹித் சர்மாவையே சேரும். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா சில வருடங்களாக இப்படித்தான் பேட்டிங் செய்து வருகிறார்.

இதையும் படிங்க:இங்கி பவுலர்ஸ் எனக்கு குறி வெச்சாங்க.. அந்த திட்டத்தை இப்படித்தான் உடைத்தேன் – ரோஹித் சர்மா பேட்டி

ஸ்கோர் போர்டு பலகையில் நாங்கள் இன்னும் ரன்கள் குவிக்க விரும்பினோம். ஆனால் அது சற்று சறுக்கியது. இந்த போட்டியில் எதிரணியும் நன்றாக விளையாடியது. நாங்கள் பவர் பிளேவில் அற்புதமாக விளையாடினோம். ஆனால் எங்களது ரன் கணக்கை மேலும் முந்தி செல்ல யாராவது ஒருவர் தேவைப்பட்டனர். 330-350 ஸ்கோர் நிலையை அடைந்திருக்க முடியும். இருப்பினும் தொடர்ந்து சரியான திசையில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து முன்னேறி நேர்மறையில் நிலையை அடைய வேண்டும் என்பதே முக்கியம்” என பேசி இருக்கிறார்.

- Advertisement -