நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கேஎல்.ராகுல் பேட்டிங் செய்த விதம் குறித்து சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக கேஎல்.ராகுல் அணியில் இடம் பெற்று இருந்த போதும் கூட அவருடைய இடம் இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. வெளியில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பையில் ஏற்பட்ட மாற்றம்
2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது கேஎல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்பியதோடு விக்கெட் கீப்பராகவும் வந்தார். அதுவரையில் இல்லாத அளவுக்கு அந்த தொடரில் அவருடைய விக்கெட் கீப்பிங் மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்தது. ஒருநாள் அணியில் அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்யும் அளவுக்கு முழுமையான தரத்தோடு காணப்பட்டார்.
இந்த நேரத்தில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி காயம் அடைந்து மறுவாழ்வில் இருந்து வந்ததால் கேஎல்.ராகுல் தொடர்ந்து இன்றைய ஒரு நாள் அணியில் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்று இருந்தார். ஆனால் அவருடைய பேட்டிங் சீரற்ற முறையில் இருக்கின்ற காரணத்தினால், அவருடைய இடம் இந்திய அணியில் தற்பொழுதுமே உறுதியில்லாமலே தொடர்கிறது. நேற்று தன்னுடைய ஆட்டத்தை ஆடாமல் கில்லுக்காக விளையாடியது இன்னும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னுடைய ஆட்டத்தை ஆட வேண்டும்
இது குறித்து நேற்று கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டிருந்த சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது “இப்பொழுது கேஎல்.ராகுல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் அவரோ தன்னுடைய பேட்டிங் பாட்னரான கில் சதம் அடிப்பதற்காக தேவை இல்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக பந்தை தட்டி விளையாட முயற்சி செய்கிறார்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் தன் பலவீனத்துக்கு கண்டுபிடிச்ச வழி இதுதான்.. பார்த்து பிரமிச்சுட்டேன் – ஜாகிர் கான் விளக்கம்
அடுத்து உடனே கேஎல்.ராகுல் ஆட்டம் இழந்ததும் பேசிய சுனில் கவாஸ்கர் “என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள். நான் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட் என்பது ஒரு டீம் ஆக சேர்ந்து விளையாடும் விளையாட்டு. இப்படி இருக்கும் பொழுது நீங்கள் கில் சதம் அடிப்பதற்காக தேவையில்லாமல் உங்கள் ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படி செய்ய நினைத்ததால்தான் அரைகுறை மனதுடன் அந்த ஷாட் விளையாடி அவர் ஆட்டம் இழந்தார்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






