பும்ரா பற்றி இந்தியாதான் கவலைப்படணும்.. பாகிஸ்தான் அணி இல்ல.. எங்க பிளான் வேற – பயிற்சியாளர் பேட்டி

0
190
Bumrah

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெறுவது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் அகிப் ஜாவேத் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? என்பது சந்தேகத்திற்கு இடமாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா?

இந்திய அணி நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரை வெல்வது பும்ரா கையில் தான் இருக்கிறது என பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை கூறியிருக்கிறார்கள். தற்போது மிகச்சிறந்த பந்துவீச்சு நிலையில் இருக்கும் பும்ரா இந்திய அணிகள் இடம் பெற்றால் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் அடுத்த வாரத்தில் பும்ரா காயம் குறித்தான ஸ்கேன் விவரங்கள் வெளிவர இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருக்கிறார். அப்போது அது குறித்து உண்மைகள் என்னவோ அதை வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிப்பதாகவும் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா பற்றி கவலை இல்லை

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் சாம்பியன் டிராபியில் மோதிக் கொள்ளும் போட்டிக்கு பும்ராவை சுற்றியே பாகிஸ்தான் அணியின் திட்டங்கள் இருக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் இதை மறுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : சாகலை விட்டுட்டு தமிழக சக்கரவர்த்தியை ஏன் செலக்ட் பண்ணாங்க?.. ஒரு காரணம் இருக்கு – இந்திய முன்னாள் கோச் பேட்டி

இது குறித்து அகிப் ஜாவேத் கூறும்பொழுது “இந்தியாதான் பும்ராவின் உடல் தகுதி பற்றி கவலைப்பட வேண்டும். நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் பொழுது மிக அழகான விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனென்றால் சிறந்த எட்டே அணிகள் மட்டுமே இந்த தொடரில் பங்கு பெறுகின்றன. எந்த அணிக்கும் பும்ரா போன்ற ஒரு பவுலர் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட். ஆனால் அவரைச் சுற்றி நாங்கள் எந்த திட்டத்தையும் தீட்டப் போவது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -