வெறும் 82 ரன்.. U-19 டி20 உலக கோப்பையை வென்றது இந்திய பெண்கள் அணி.. தென் ஆப்பிரிக்கா தோல்வி

0
865
ICT

நடப்பு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி உலக கோப்பையை வென்று அசத்தியது.

தற்போது மலேசியா கோலாலம்பூரில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றன. இன்று இறுதிப் போட்டி மலேசியா கோலாலம்பூர் மைதானத்தில் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது.

- Advertisement -

பந்துவீச்சில் அசத்திய இந்திய வீராங்கனைகள்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அவர்களால் இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாததால் ரன்கள் எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக மிக்கி வான் வூர்ஸ்ட் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் கோங்காடி திரிஷா 3, வைஷ்ணவி சர்மா, ஆயுசி சுக்லா மற்றும் பருனிக்க சிசோடியா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி

இதைத்தொடர்ந்து மிகக் குறைந்த இலக்கை நோக்கி இந்திய பெண்கள் அணி களம் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான ஜி.கமாலினி 13 பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் எட்டு ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இவர் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தாலும் அது இந்திய அணியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

இதையும் படிங்க: ஹர்ஷித் விவகாரம் தப்பு கம்பீர் மேல கிடையாது.. இந்த முன்னாள் இந்திய வீரர்தான் காரணம் – கெவின் பீட்டர்சன் விமர்சன

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் இன்னொரு தொடக்க வீராங்கனை கோங்காடி திரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள், ஷனிகா 22 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். இந்திய அணி வெறும் 11.2 ஓவரில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரை வென்று சாம்பியன் ஆகி அசத்தியது.

- Advertisement -