பும்ரா ஒருவேளை இல்லனா.. இந்த 23 வயது பையன்தான் சரியான மாற்று வீரர் – கம்ரான் அக்மல் பேட்டி

0
945

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட உள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் உடல்நிலை குறித்து சில சந்தேகங்கள் இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணியின் நம்பிக்கையான வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் முதுகுப்பகுதியில் வீக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பும்ராவின் பெயர் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ளது.

இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான போட்டி தொடங்கும் முன் அவர் கண்காணிக்கப்படுவார். அவர் முழுமையாக உடல் நிலை தீரவில்லை என்றால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் இந்த தொடருக்கு இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான கம்ரான் அக்மல் பும்ரா ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம் பெறுவார் என்று சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு பதில் மாற்று வீரர் இவர்தான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜஸ்பிரித் பும்ரா ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக ஹர்ஷித்ராணா நிச்சயமாக இடம் பெறுவார். ஏனென்றால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பந்து வீசிய விதம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது இதை வைத்துப் பார்க்கும்போது அவர்தான் இடம் பெறுவார். மேலும் இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க:அடிச்சு சொல்றோம்.. இந்த 2 டீம்தான் சாம்பியன் டிராபி பைனலுக்கு போகும்.. இரண்டு முன்னாள் ஜாம்பவான்கள் கணிப்பு

ஒருவேளை அவர்கள் இடம் பெற்றிருந்தால் இந்தியாவின் சுழல் பந்து வீச்சுத் துறை இன்னும் வலுவாக இருந்திருக்கும்” என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சிவம் துபெ விளையாட முடியாமல் போக அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்று வீரராக வந்தார். இங்கிலாந்து அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -