விராட் கோலிக்கு அந்த பெருமை இல்ல..5 6 வருஷத்துக்கு முன்னவே வெளியே போயிட்டாரு – ரிக்கி பாண்டிங் சர்ச்சை கருத்து

0
67
Ponting

தற்போதைய கிரிக்கெட் காலகட்டத்தில் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆக கருதப்படும் விராட் கோலியின் பெயரை சேர்த்துக் கொள்ளாமல் ரிக்கி பாண்டிங் நிராகரித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்த கேப்டன் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்தார்.

- Advertisement -

விராட் கோலிக்கு ஏற்பட்ட மாபெரும் சரிவு

விராட் கோலி 2019 ஆம் ஆண்டு தன்னுடைய சக போட்டியாளர்களான ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை விட அதிக டெஸ்ட் சதங்கள் அடித்து முன்னணியில் இருந்தார். ஆனால் அங்கிருந்து தற்போது வரையில் ஜோ ரூட் மட்டும் 19 டெஸ்ட் சதங்கள் அடித்து யாரும் எட்ட முடியாத இடத்திற்கு சென்று இருக்கிறார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமில்லாத அளவுக்கு விளையாடி விராட் கோலியை தாண்டி இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலிக்கு கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேட்டிங் பின்னடைவு உருவானது. முன்னணியில் இருந்தவர் இந்த பட்டியலில் தற்போது பின்னால் தள்ளப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு இடம் கிடையாது

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “ஸ்மித் இந்த தலைமுறையின் மிகச்சிறந்த வீரரா? என்பது குறித்து பேசுவது மிகவும் கடினம். இன்னொரு பக்கத்தில் கேன் வில்லியம்சன் மிகவும் சிறப்பாக இருக்கிறார். அடுத்து ஜோ ரூட் கடந்த இரண்டு வருடமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கும் விதத்தில் அவர் முன்னணியில் இருக்கிறார்”

இதையும் படிங்க : இங்கி 4வது டி20 போட்டி.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 மாற்றங்கள் நடக்கிறதா.. தொடர் யாருக்கு?

“ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த நான்கு டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் உருவான பொழுது அதில் விராட் கோலி இருந்தார். இதில் மற்றவர்கள் செய்த அளவிற்கு ஜோ ரூட் செய்யாத காரணத்தினால் அவர் கீழே இருந்திருப்பார். ஆனால் தற்பொழுது அவர் மிகச் சிறப்பாக விளையாடி மேலே வந்திருக்கிறார். 19 சதங்கள் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ரசிகர்களிடம் கேட்டால் அவரவர் நாட்டின் வீரர்களையே சிறந்தவர் என்று கூறுவார்கள். இதில் ஒருவரை தேர்ந்தெடுப்பது கடினம்” என்று கூறியிருக்கிறார். இந்த விவாதத்தில் அவர் விராட் கோலி பெயரை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -