இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அக்சார் பட்டேல் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் அதிக ஆல் ரவுண்டர்கள்
இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் பொருத்தவரை ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் தேர்வு செய்து வருகிறது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மூன்று ஆல் ரவுண்டர்களை வைத்து விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சார் பட்டேல் போன்ற ஆல்ரவுண்டர்கள் விளையாடியிருந்தனர்.
இதில் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு டாப் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடிய அக்சார் பட்டேல் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 8 அல்லது ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கி விளையாடிய வருகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டி20 போட்டியில் எட்டாவது இடத்தில் களமிறங்கிய அக்சார் பட்டேல் மூன்று பந்துகளில் இரண்டு ரன் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேறினார். கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் அக்சார் பட்டேல் பொறுப்பை உணர்ந்து விளையாட கூடியவர் என்றும் அவரை டாப் வரிசையில் அனுப்புமாறு ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
டி20 உலக கோப்பையை பாருங்கள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” அதிகமான ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீங்கள் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்து வருகிறீர்கள், ஆனால் பந்துவீச்சில் ஒரு ஓவர் மட்டுமே தருகிறீர்கள். அக்சார் பட்டேல் விளையாடி வருகிறார். ஆனால் அவரது பேட்டிங் வரிசை தற்போது 8 அல்லது 9வது இடத்தில் இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உங்களிடத்தில் பல ஆல் ரவுண்டர்கள் இருக்கும்போது அவர்களை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாது. இதில் அவருக்கு போதுமான பேட்டிங் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க:முதல் 3 ரன்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்றை எழுதிய தினேஷ் கார்த்திக்.. எஸ்ஏ டி20
அக்சார் பட்டேல் பற்றி கூறுவது என்னவென்றால் கடந்த போட்டியில் அவர் விளையாடிய விதத்தை மறந்து விடுங்கள். கடந்த ஒன்றரை வருடங்களாக பார்த்தால் அவர் பொறுப்பான பேட்ஸ்மேன். அவரை எட்டாவது இடத்தில் அல்ல அதற்கு முன்பாகவே அனுப்பலாம் இந்திய அணி அவரை மூன்று அல்லது நான்காவது இடத்தில் கூட அனுப்பியுள்ளது. அவர் குறிப்பாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எப்படி விளையாடினார் என்பது நன்றாக தெரியும். எனவே அவரை இவ்வளவு தாழ்வாக பேட்டிங் அனுப்புவது சரியல்ல” என்று கூறி இருக்கிறார்.






