நேற்று நடைபெற்ற எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 21வது ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய எம்ஐ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக்
தென் ஆப்பிரிக்காவில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான எஸ்ஏ டி20 கிரிக்கெட் டி20 வடிவத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதன் 21வது லீக் ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீச தீர்மானிக்க, பேட்டிங் களம் இறங்கிய டர்பன் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமானதாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிகாக் 5 ரன் மற்றும் பிரண்டன் கிங் 4 ரன்னில் வெளியேற, மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் பிரீஸ்க் 6 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய வில்லியம்சன் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக விளையாடினார். க்ளாசன் மற்றும் வில்லியம்சன் கூட்டணி சரிவில் இருந்த டர்பன் அணியை தூக்கி நிறுத்தி ஓரளவு சவாலான ஸ்கோரை நிர்ணயிக்க உதவியது. வில்லியம்சன் மற்றும் கிளாஸன் ஜோடி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் 121 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளாசன் 43 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் என 66 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். வில்லியம்சன் 44 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இதனால் டர்பன் அணியின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி எம்ஐ அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரிக்கல்டன் மற்றும் வாண்டர் டசன் ஜோடி அதிரடியாக விளையாடி 8 ஓவர்களில் 75 ரன்கள் குவித்தது. இதில் வான்டர்டசன் 24 ரன்னில் வெளியேற மூன்றாவது வரிசைவீரர் பிரவீஸ் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 41 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 61 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:இக்கட்டான நேரத்தில்.. நான் ரவி பிஷ்னாயிடம் இதைத்தான் சொன்னேன்.. அற்புதமா ஆடுனாரு – திலக் வர்மா பேட்டி
மறுமுனையில் ஜார்ஜ் லின்டே வெறும் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 29 ரன்கள் குவிக்க எம்ஐ அணி 14.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்து 31 பந்துகள் மீதம் வைத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. டர்பன் அணி தோல்வி அடைந்தாலும் இக்கட்டான நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை காப்பாற்றிய கிளாசன் ஆட்டநாயகன் விருது வென்றார். ஏழு போட்டிகளின் நான்கு கட்சிகளை பெற்ற எம்ஐ அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.






