இக்கட்டான நேரத்தில்.. நான் ரவி பிஷ்னாயிடம் இதைத்தான் சொன்னேன்.. அற்புதமா ஆடுனாரு – திலக் வர்மா பேட்டி

0
4583

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த திலக் வர்மா வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி சிறப்பான வெற்றி

இந்தப் போட்டியில் எதிர்பாராத விதமாக டாசை இழந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதில் தொடக்க வீரர்கள் வழக்கம் போல விரைவாக வெளியேற, அதற்குப் பிறகு கேப்டன் பட்லர் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று போராடினார். ஒரு சிலரை தவிர அவருக்கு யாரும் ஆதரவு தராததால் இங்கிலாந்து அணி இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. பட்லர் அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்கள் அனைவரும் விரைவாக வெளியேற, மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய திலக் வர்மா மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடினார். ஒரு கட்டத்தில் வெற்றி பெறவேண்டிய தருவாயில் இருந்த இங்கிலாந்து அணியை ரவி பிஸ்னாய் சில நேர்த்தியான ஷாட்களின் மூலமாக திலக் வர்மாவிற்கு சிறப்பான கம்பெனி கொடுத்து போட்டியை இந்திய அணியின் பக்கம் திருப்பினார். இறுதியில் திலக் வர்மா 72 ரன்கள் மற்றும் ரவி பிஸ்னாய் இக்கட்டான நேரத்தில் 9 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நான் ரவியிடம் இதைத்தான் கூறினேன்

இந்த போட்டியில் வெற்றி பெற்ற விதம் குறித்து திலக் வர்மா கூறும் போது ” இந்தப் போட்டியில் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சாதகமாக இருந்தது. நான் நேற்று கம்பீர் சாரிடம் பேசும் போது அவர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடுமாறு என்னிடம் கூறினார். இடது வலது காம்பினேஷன் எப்போதுமே ஒரு நல்ல கலவையாக இருக்கும். இதை எதிர்கொள்ளும் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு கடினமான பகுதியாகவே இருக்கும். நாங்கள் ஏற்கனவே இதை தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போது அங்கு கடினமாக அவர்களுக்கு இருந்தது.

இதையும் படிங்க:இந்த 3 விஷயம் சரியா செஞ்சும் தோத்துட்டோம்.. இதுக்கு காரணமே அவர் ஒருத்தர்தான் – ஜாஸ் பட்லர் பேட்டி

நாங்கள் வலை பயிற்சியில் நன்றாக தயாரானோம். இப்போது நல்ல முடிவு கிடைத்து இருக்கிறது. இக்கட்டான நேரத்தில் நான் ரவி பிஷ்னாயிடம் உங்களது வடிவத்தை பந்துக்கு ஏற்ப சரியாக தக்கவைத்துக் கொண்டு தகுந்த இடைவெளியில் அடிக்க வேண்டும் என்று கூறினேன். அதில் அவர் வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக ஒரு பிளிக் சாட் லிவிங்ஸ்டனுக்கு எதிராக ஒரு பவுண்டரி அடித்தது நிஜமாகவே அசாதாரணமானது. அது ஆட்டத்தை முடிப்பதற்கு எளிதாக உதவியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -