நீங்க ஆர்சிபி ரசிகரா இருந்தா.. இந்த ஓன்ன மறக்காம செய்யுங்க – அஸ்வின் இங்கிலாந்து அணி பற்றி கருத்து

0
55
Ashwin

இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியில் இருக்கும் நான்கு வீரர்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் நான்கு இங்கிலாந்து வீரர்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் மதிப்பு வாய்ந்த வீரர்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “தற்போது டி20 கிரிக்கெட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்த பேட்டராக பில் சால்ட் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கடைசியாக அவர் பேட்டிங் செய்து வரும் விதத்தை வைத்து பார்க்கும் பொழுது அவர் அவருடைய சிறந்த பார்ம்புக்கு வரவில்லை. கடைசியாக அவர் ஒரு 70 ரன்கள் எடுத்திருந்தார் அது மிகவும் கடினப்பட்டு எடுத்திருந்தார்”

“பென் டக்கெட் அவர் மிகவும் தைரியமான ஒரு வீரர். நான் அவருடன் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் சிவப்பு பந்தில் பெற்ற வெற்றியை வெள்ளை பந்தில் கொண்டுவர முடியுமா என்று பார்க்க வேண்டும். வங்கதேசத்தில் விளையாடிய பொழுது ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் நன்றாக விளையாடினார். அவர் சிறந்த முறையில் வெளி வருவதற்கு பாஸ்பால் அணுகுமுறை காரணமாகவும் இருந்தது”

- Advertisement -

ஆர்சிபி ரசிகர்கள் ஞாபகத்தில் வையுங்கள்

“இதுவரை ஹாரி புரூக் எந்த வடிவ கிரிக்கெட்டில் நுழைந்த பொழுதும் அவரே மையமாக இருந்திருக்கிறார். இந்தப் பையன் எதையும் செய்யக்கூடிய அளவுக்கு மிகவும் திறமையானவராக இருக்கிறார். மேலும் உலக கிரிக்கெட்டில் கவனிக்கப்படக்கூடியவராகவும் இருக்கப் போகிறார்”

இதையும் படிங்க : கம்பீர் கூட நல்லா இருக்கோம்..நாங்க 2 பேரும் அடுத்து இதைத்தான் செய்வோம் – சூரியகுமார் யாதவ் பேச்சு

“மேலும் நீங்கள் ஆர்சிபி ரசிகராக இருந்து ஒரு புதிய வீரரை பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் கட்டாயமாக ஜேக்கப் பெத்தேலை பார்க்க வேண்டும். நீங்கள் இவரை கொஞ்சம் கவனியுங்கள். இவர் மிகப்பெரிய வீரராக வரப் போகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -