3 மீட்டர் உயரத்திற்கு பவுன்சர் வீசிய மிட்செல் ஸ்டார்க் ; கட்டுப்படுத்த முடியாமல் படுத்தவாறு சிரித்த விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் – வீடியோ இணைப்பு

0
1992
Mitcell Starc 3 metres high Bouncer

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் சூப்பர் ஓவர் முடிவில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது.

தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷனங்கா மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 39* ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இலங்கை அணி நிர்ணயித்த இலக்கு 17-வது ஓவரிலேயே எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 26 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

3 மீட்டர் உயரத்திற்கு பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க்

நேற்றைய ஆட்டத்தில் முதலில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் 18-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை அவர் இலங்கை அணியின் கேப்டன் ஷனங்காவிற்கு எதிராக வீசினார். ஆஃப் கட்டர் பந்தை வீச அவர் முயற்சி செய்த போது எதிர்பாராதவிதமாக அவரது கையிலிருந்த பந்து நழுவி சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு சென்றது.

ஷனங்காவின் தலைக்கு மேல் சென்ற அந்த பந்தை வலது பக்கமாக தாவி ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் பிடிக்க முயற்சித்தார். இருப்பினும் அந்த பந்து அவரையும் தாண்டி பவுண்டரிக்கு சென்றது. மேலும் அந்த பந்தை நடுவர் நோபால் என்று அறிவித்தார். இதனால் இலவசமாக இலங்கை அணிக்கு 5 ரன்கள் கணக்கில் சேர்ந்தது. இதுபோல ஒரு பந்தை பிடித்த ஸ்டார்க் அவரது கிரிக்கெட் கேரியரில் இதுவரை வீசியதில்லை.

- Advertisement -

அவர் இவ்வாறு வீசியவுடன் போட்டியின் வர்ணனையாளர்கள் மிட்ச்செல் ஸ்டார்க் வீசிய பந்தை குறித்து கலகலப்பாக பேசினார்கள். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மைதானத்திலேயே சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தரையில் படுத்தவாறு சிரித்துக் கொண்டிருந்தார்.

இருப்பினும் இறுதியில் மிட்ச்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் முடிவில், எந்தவித விக்கெட்டையும் கைப்பற்றாமல் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி மெல்போர்னில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.