பும்ரா இல்லாம.. கில் துணை கேப்டனா அறிவிக்க.. காரணமே இதுதான் – அஜித் அகர்கர் பேட்டி

0
944

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்குப் பிறகு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் துணை கேப்டனாக சுப்மான் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது சில சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கில் துணை கேப்டன்

இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் அடைந்து டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. மேலும் அந்த அணியில் இடம் பெற்று இருந்த இளம் வீரர் சுப்மான் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஐந்தாவது போட்டிக்கு முன்பாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் அதற்கு முன்னால் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அவரது ஆட்டம் பெரிய அளவில் இருக்க வில்லை. இந்த நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் பரவிய நிலையில் எதிர்பாராத விதமாக கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஐந்தாவது போட்டிக்கு முன்பாக பும்ரா காயம் அடைந்து வெளியேறி இருந்தாலும் தற்போது சாம்பியன்ஸ் டிராபிக்கானா இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

தலைவர்களை நான் அதிகம் ஆராய மாட்டேன்

எனவே அவரைத் துணைக்கப்பனாக நியமிக்காமல் இளம் வீரரை நியமித்தது ஏன் என்று விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் டி20 உலக கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ஆகவும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் துணைக் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அஜித் அகர்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:2 பந்து மீதம்.. 69 பந்து 125 ரன்.. மெகா கூட்டணி அமைத்த ஜோரூட் ஹெர்மன் ஜோடி.. எஸ்ஏ டி20.. பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நீங்கள் எப்போதும் தலைவர்களை தேடிக் கொண்டே இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் ஆராய மாட்டேன். கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். ஆனால் இந்த முடிவுகளுக்கான பெரும்பாலான கருத்துக்கள் அனைத்துமே ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளிவந்தவை தான். எனவே அவற்றின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -