2 பந்து மீதம்.. 69 பந்து 125 ரன்.. மெகா கூட்டணி அமைத்த ஜோரூட் ஹெர்மன் ஜோடி.. எஸ்ஏ டி20.. பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி

0
361

தென்னாபிரிக்காவில் எஸ்ஏடி 20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள இன்றைய நாளில் முதல் போட்டியாக பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் விளையாடின. செஞ்சுரியனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விக்டோரியா அணி முதலில் பேட்டிங் செய்ய பிரிட்டோரியா அணியின் இன்னிங்சை வில் ஜாக்ஸ் மற்றும் குர்பாஸ் ஆகியோர் துவங்கினார்கள். வில் ஜாக்ஸ் 9 ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு துவக்க வீரர் குர்பாஸ் அபாரமாக விளையாடினார். 29 பந்துகளை எதிர் கொண்டு மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 43 ரன்கள் அடித்தார்.

அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த வில் ஸ்மீது 34 பந்துகளை எதிர் கொண்டு 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு விக்கெட் கீப்பர் வெரின் 23 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க விக்டோரியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது.

- Advertisement -

டேவிட் மில்லர் ஜோ ரூட் அதிரடி ஆட்டம்

இதில் துவக்க ஆட்டக்காரர் பிரிட்டோரியஸ் தான் சந்தித்த முதல் பந்தியிலேயே வில்ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு துவக்காட்டக்காரர் ஜோ ரூட்டோடு மூன்றாவது வரிசை வீரர் ஜெர்மன் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இருவர் கூட்டணி மூன்றாவது விக்கட்டுக்கு 69 பந்துகளுக்கு 125 ரன்கள் குவித்தது. இதில் ஜெர்மன் 33 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஜோ ரூட்டோடு கேப்டன் டேவிட் மில்லர் கூட்டணி அமைத்தார்.

இதையும் படிங்க:எனக்கும் கம்பீருக்கும் பிரச்சனையா.. என் பதில் இதுதான்.. அந்த ரகசியத்தை சொல்ல மாட்டேன் – ரோகித் சர்மா பேட்டி

இந்த இருவர் ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று அபாரமாக விளையாடி இரண்டு பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் 213 ரன்கள் எடுக்க வைத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. டேவிட் மில்லர் மற்றும் ஜோ ரூட் கூட்டணி 48 பந்துகளுக்கு 88 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அணியின் கேப்டன் டேவிட் மில்லர் 24 பந்துகளில் 48 ரன்கள் எடுக்க, துவக்க வீரர் ஜோ ரூட் 60 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 92 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

- Advertisement -