ஸ்மித்துக்கு பொறாமைதான்.. இருந்தாலும் அவரோட வேதனை எனக்கு புரிகிறது – டி20 லீக் குறித்த கருத்துக்கு சேவாக் பதிலடி

0
246

தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் தொடர் போன்று டி20 கிரிக்கெட் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் போன்று பெரிய புகழ் இருந்தாலும் இதில் குறைவான வெளிநாட்டு வீரர்களே பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகி வரும் நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கிரீம் ஸ்மித் கூறிய சர்ச்சை கருத்து

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் உள்ளூர் வீரர்களை தாண்டி பல வெளிநாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடிட்டு இருப்பதால் இது இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகள் இடையே மிகப்பெரிய புகழ்பெற்றது. தற்போது அதனை பின்பற்றி மற்ற நாடுகளும் டி20 லீக் தொடர் நடத்தி வரும் நிலையில் தென்னாப்பிரிக்க அணியும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக எஸ்ஏ கிரிக்கெட் லீக் தொடரை அறிமுகப்படுத்தியது. இதுவும் புகழ்பெற்று இருந்தாலும் ஒரு சில வெளிநாட்டு வீரர்களை தாண்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் பெருமளவில் பங்கேற்பது இல்லை.

ஆனால் துபாயில் நடைபெற்று வரும் யுஏஇ டி20 லீக் தொடருக்கு மற்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஸ்மித் ஐஎல் டி20 லீக் தொடர் மற்ற அணி தொடர்களுக்கு நல்லதல்ல எனவும், ஒரு அணியை உருவாக்க பல சர்வதேச வீரர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் இங்கு தென்னாப்பிரிக்கா வீரர்கள் அதிகமாக விளையாடுகிறார்கள் எனவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

ஸ்மித்தின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது

இந்த நிலையில் இது குறித்து பேசிய சேவாக் “எங்களிடம் ஏராளமான சர்வதேச வீரர்கள் டி20 லீக் தொடரில் பங்கு பெறுவதால் அவருக்கு சற்று பொறாமை ஏற்படுகிறது. ஆனால் தென்னாப்பிரிக்கா லீக் டி20 தொடரில் சர்வதேச வீரர்களின் பற்றாக்குறை இருப்பது தெரிகிறது. ஸ்மித்தின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஐஎல்டி 20 லீக் தொடருக்கு சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க:எஸ்ஏ டி20 லீக்.. வெறும் 6 பந்தில் பார்ல் ராயல்ஸ் வெற்றி.. பிரிட்டோரியஸ் சரவெடி ஆட்டம்.. 6 விக்கெட்டில் எம்ஐ தோல்வி

ஜாம்பவான்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் யுஏஇல் விளையாடக்கூடிய உள்ளூர் திறமையான வீரர்களின் திறமைகள் வெளிவருவதை பார்க்க முடியும்” என்று ஷேவாக் கூறியிருக்கிறார்.
தற்போது தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் போன்ற நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல விளையாட ஆரம்பித்து வருகின்றனர். எனவே இவர்கள் போல பல சர்வதேச நட்சத்திர வீரர்களும் இதில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -