இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. இதற்கு அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கப்பில் தேவ் கௌதம் கம்பீர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் தலைமையில் தொடர் தோல்வி
இந்திய அணியின் பயிற்சியாளர்களாக ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருந்தபோது தொடக்கத்தில் அணி சிறிய சரிவுகளை சந்தித்தாலும் அதற்குப் பின்னர் மீண்டு எழுந்து வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான பயிற்சியாளர் என்று பெயர் பெற்ற கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அணி சிறந்த சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக இந்திய அணி சாதனை தோல்விகளை சந்தித்து வருகிறது.
இலங்கை அணிக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்த ஒரு நாள் தொடர் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இழந்த டெஸ்ட் தொடர் பத்து வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்தது என்று இந்திய அணி வரிசையாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கௌதம் கம்பீர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறுகிறார். கம்பீர ஆலோசனைகளை மட்டுமே வெளியிட முடியும் தவிர களத்தில் செயல்பட முடியாது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் சற்று கோபமுடைய நபர்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்திய அணி மீது அதிக அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. போட்டியில் பயிற்சியாளர்கள் களத்தில் இல்லை ஆனால் அணியும் கேப்டன் மட்டுமே களத்தில் இருக்கிறார்கள். ஒரு புதிய பயிற்சியாளர் தனது சொந்த யோசனைகளை வெளிப்படுத்தி அது நாட்டுக்கு சிறப்பாக செயலாற்ற உதவும் என்று நம்புவார். ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் மக்கள் தங்களது விரல்களை உயர்த்த ஆரம்பிப்பார்கள்.
இதையும் படிங்க:நாங்க ஈஸியா பைனல்ஸ் போயிட்டோமா?. அவங்களுக்கு என்னோட பதில் இதுதான் – தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பதிலடி
கம்பீர் சற்று கோபக்காரர் அவர் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர். ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் அவர்களது சிந்தனை முறை வேறு வேறாக இருக்கும் எனவே கம்பீர் நாட்டுக்காக சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவோம் என கபில்தேவ் கூறியிருக்கிறார். இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அடுத்த மாதம் விளையாட உள்ள நிலையில் இந்த கோப்பையை வென்றால் மட்டுமே கம்பீர் மீதான விமர்சனங்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.






