2025 சாம்பியன்ஸ் டிராபி.. நியூசி அணி அறிவிப்பு.. மாஸ் பவுலிங் யூனிட்.. இந்தியாவுக்கு நெருக்கடி

0
1722
NZ

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் இந்தியா நியூசிலாந்து, பங்களாதேஷ் என 4 அணிகள் ஒரு பிரிவில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

தொடரும் புதிய கேப்டன்

தற்போது சாம்பியன்ஸ் டிராபிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் நியூசிலாந்து அணிக்கு சுழல் பந்துவீச்சாளர் மிட்சல் சான்ட்னர் கேப்டனாக தொடர்கிறார். மேலும் இந்த அணிக்கு நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்பி வந்திருக்கிறார். மேலும் தொடக்க இடத்திற்கு ரச்சின் ரவீந்தரா மற்றும் கான்வே இருவரும் தொடர்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் அனுபவ வீரர்களான டாம் லாதம், டேரில் மிட்சல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகிய அனுபவ பேட்ஸ்மேன்கள் வருகிறார்கள். இந்த வகையில் நியூசிலாந்து அணியில் பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாகவே காணப்படுகிறது. மிக வேகமாக நியூசிலாந்து அணி சரியான இடத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அசத்தும் மாஸ் பவுலிங் யூனிட்

அதே சமயத்தில் நியூசிலாந்து அணியின் பவுலிங் யூனிட் மிகவும் வலிமையாக அமைந்திருக்கிறது. இதில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் மேக் ஹென்றி மற்றும் லாக்கி பெர்குஷன் உடன் இளம் பந்துவீச்சாளர்கள் ஜேக்கப் டஃபி, பென் சீர்ஸ் மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் என சிறப்பான வேகப்பந்து வீச்சு யூனிட் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : நல்லா யோசிங்க.. ஆஸி டெஸ்ட் தோல்விக்கு 2 பேர் மட்டும்தான் காரணமானு தெரியும் – ஜாண்டி ரோட்ஸ் கருத்து

வழக்கமாக ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனை தரக்கூடிய அணியாக நியூசிலாந்து இருந்து வந்திருக்கிறது. இந்த முறையும் இந்தியா இடம்பெற்று இருக்கும் குழுவில் இடம் பெற்றும் இருக்கிறது. மேலும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அழுத்தம் குறைவாக இருக்கும். இந்திய அணி பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தான் அணி உடன் தோல்வி அடைந்தால், அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு நியூசிலாந்து அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கும் பொழுது பெரிய தலைவலியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -