இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடிய நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ட்
டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் அதற்கு அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் சமீப காலமாக தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருகின்றனர். டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் அதற்கு அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர், வங்கதேச டெஸ்ட் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் என்று வரிசையாக சீனியர் வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
மேலும் அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதற்கு இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்கள் பங்கு பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மினி உலக கோப்பையாக கருதப்படும் இந்தத் தொடரில் கடைசியாக பாகிஸ்தான் அணி சாம்பியன் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
கேஎல் ராகுலுக்கு அடித்த ஜாக்பாட்
எனவே இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி வருகிற 22ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்கு அடுத்ததாக அடுத்த மாதம் 6ம் தேதி முதல் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. எனவே வீரர்களின் பனிச்சுமையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டிய திட்டத்தில் இந்திய அணி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:14000 ரன்.. சச்சின் சங்கக்கராவை முந்தும் விராட் கோலி.. ஒரு நாள் தொடரில் படைக்க உள்ள வரலாற்று சாதனை
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி கேஎல் ராகுல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இடம் பெற இருப்பது உறுதியாகி உள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு கே எல் ராகுல் திரும்ப வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓரளவு நன்றாக விளையாடியதால் அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான வெள்ளை பந்து தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. எனவே அவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் சில மூத்த வீரர்களுக்கு இந்திய நிர்வாகம் ஓய்வு வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். நல்ல ஓய்வில் புத்துணர்ச்சியோடு சாம்பியன்ஸ் டிராபி விளையாடினால் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இந்திய அணிக்கு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.






