கவாஸ்கர் பெயரில் தொடரை நடத்தி.. அவருக்கு இப்படி செய்வது நியாயமே இல்லை – பிசிசிஐ தலைவர் ராஜிவ் சுக்லா பேட்டி

0
52

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பை 10 வருடத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா அணி மீண்டும் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் பரிசளிப்பு விழாவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கவாஸ்கரை புறக்கணித்தது குறித்து பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுற்றுலா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பார்டர் கவாஸ்கr கோப்பை 2024-25

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் கடந்த மூன்று முறை இந்திய அணி வெற்றி பெற்றது. அதில் இரண்டு முறை ஆஸ்திரேலியாவிலும், ஒரு முறை இந்தியாவிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்த தொடர் நடைபெற்றது. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களான ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயரில் இந்தத் தொடர் நடைபெறுவதால் ஒரு அணி கோப்பையை வெல்லும் போது இரண்டு ஜாம்பவான்களும் மேடையில் இருப்பது வழக்கம்.

அப்படித்தான் இதுவரை இரண்டு வீரர்களும் மேடையில் இருக்க கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்ற போது இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பரிசளிப்பு விழாவில் மேடைக்கு அழைக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சற்று ஏமாற்றம் தெரிவித்திருந்த நிலையில் பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா சுனில் கவாஸ்கர் அழைக்கப்படாதது குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது சங்கடமான பெரிய பிழை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சுனில் கவாஸ்கர் அழகான மனிதராகத் தெரிகிறார். அடக்கமான ஒரு கிரிக்கெட் மேதை. பரிசளிப்பு விழாவில் சுனில் கவாஸ்கர் மேடையில் இல்லாமல் இருப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது ஒரு பயங்கரமான சங்கடமான பிழையாக அமைந்திருக்கிறது. கவாஸ்கர் குறித்து நீல் பேசிய கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

இதையும் படிங்க:பும்ராவை கரும்பு சக்கையா ஆக்கிட்டீங்க.. பிசிசிஐக்கு இந்த புரிதல் சுத்தமா இல்ல – ஹர்பஜன் சிங் விமர்சனம்

கவாஸ்கர் மைதானத்தில் இருந்த போதும் அவர் மேடைக்கு அழைக்கப்படவில்லை. கோப்பை இந்த இருவரின் பெயரில் நடத்தப்படுகிறது. அதில் ஒருவர் மேடையில் இல்லை என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். நான்கு வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இதே ஸ்டேடியத்தில் இருப்பார்களா இல்லையா என்பது யாருக்கு தெரியும். இருவரும் ஒன்றாக இருப்பதே ஒரு அரிய காட்சி எனவே கவாஸ்கர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -