பும்ரா எங்கள ரொம்ப சோதிச்சிட்டாரு.. அவர் மூலமா எங்க ஆளுங்க இந்த விஷயங்களை கத்துக்குவாங்க – ரிக்கி பாண்டிங் பேட்டி

0
489

இந்தியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா மூலமாக எங்கள் இளம் வீரர்கள் சில விஷயங்களை கற்றுக் கொள்வார்கள் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய தூணாக விளங்கியவர் வேகபந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் பாதி வரை அவர் விளையாடிய நிலையில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது மிகச் சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்கி இருக்கிறார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு வேலை பும்ரா விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்.

இப்படி ஒரு டெஸ்ட் தொடர் இந்திய அணி பும்ராவையே பெரும்பாலும் சார்ந்து இருந்தது மறுக்க முடியாத உண்மையாக மாறி இருக்கிறது. இது ஒரு விஷயத்தில் பெருமை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் மறுபுறத்தில் இந்திய அணி திறமையான பந்துவீச்சாளர்களை நிச்சயம் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பும்ராவின் மூலமாக ஆஸ்திரேலிய இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் முறை குறித்து கற்றுக் கொள்வார்கள் என்று ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பாண்டிங் கூறும் பொழுது “சந்தேகமே இல்லாமல் நான் பார்த்த வேகப்பந்து வீச்சு தொடர்களில் மிகச்சிறந்த தொடர் இதுவாகும். இந்தத் தொடரின் பெரும் பகுதியில் இந்திய அணி நல்ல நிலைமைகளை கொண்டிருந்தது. ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களை ஒப்பிடும்போது பும்ரா ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் வரிசையை மிகவும் கடினம் ஆக்கினார். இந்த ஆஸ்திரேலியா டாப் வரிசையிலும் திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. சீனியர் வீரர்களின் நிலை என்ன.? பும்ராவின் காயம்.. முக்கிய முடிவை எடுக்க உள்ள பிசிசிஐ

ஆனால் அனைவரையும் பும்ரா கடினமான சோதனைக்கு உட்படுத்தினார். சில நேரங்களில் இந்த வகையான கற்றல் மிகவும் முக்கியமானவை. இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்கள் குவித்து ஒரு குறிப்பிட்ட வழியில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சில நேரங்களில் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு உங்களை மாற்றி செயல்பட வேண்டும். இந்தக் கற்றல் எதிர்காலத்துக்கு நிச்சயமாக உதவும். அவர்கள் இந்த தொடரின் மூலமாக நிறைய அனுபவம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் இந்த இடத்தில் இருந்து வலிமையிலும் வலிமைக்கு செல்கிறார்கள். எங்கள் அணியிலும் திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கப்பட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -